Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (96 முதல் 100 வரை)


எனது 96வது நூல் (மே 2006)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 46 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4) .

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122, Kurunegala Rd ).
96பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 27X21.5 சமீ. ISBN: 955-8913-34-0.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 220வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந் நூலில் மாதிரி வினாத்தாள்களுடன், ஆங்கிலப் பாடப்பரப்பின் பின்னைய பகுதிகள் படங்களுடன் சுருக்கக் குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்து நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டு இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள் அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4268)



என்னால் எழுதி வெளிவந்த 97வது நூல் (செப்டெம்பர் 2006)

பொது அறிவுச்சரம் (தொகுதி 01).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

.பொது அறிவுச்சரம் (தொகுதி 01). பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006, (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே)
40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை : ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (!SBN: 955-8913-50-2)

இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதியும், பொதுஅறிவினைக் கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை வரலாற்றில் நீர்வள, நாகரீக, பொது அறிவு விடயங்களும், நிகழ்காலப் பொது அறிவு விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தனைவட்டத்தின் 226வது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் நூலாசிரியர் புன்னியாமீனால் எழுதப்பட்ட 97வது நூலாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4010)



 என்னால் எழுதி வெளிவந்த 98வது நூல் (செப்டெம்பர் 2006)

பொது அறிவுச்சரம் (தொகுதி 02)


ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

.பொது அறிவுச்சரம் (தொகுதி 02). பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006, (உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு , 14, உடத்தலவின்னை மடிகே)
40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-51-0)

இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதியும், பொதுஅறிவினை கற்க ஆர்வமுள்ள வர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கையில் பொலன்னறுவை யுகத்தைச் சேர்ந்த பொதுஅறிவு நிகழ்வுகளும், இலங்கையை ஆட்சிபுரிந்த மன்னர்களின் சுருக்க வரலாறுகளும், மொழி, இலக்கியம், சட்டக்கலை, சிற்பக்கலை போன்ற விடயங்களும் தரப்பட்டுள்ளன. இது சிந்தனை வட்டத்தின் 227வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4011)



என்னால் எழுதி வெளிவந்த 99வது நூல் (செப்டெம்பர் 2006)

பொது அறிவுச்சரம் (தொகுதி 03)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

.பொது அறிவுச்சரம் (தொகுதி 03). பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே)
40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை : ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-52-9)

இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதியும், பொதுஅறிவினைக் கற்க ஆர்வமுள்ள வர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்து அரசியல், பொருளாதார, சமய, சமூக, கலாசார நிகழ்வுகளின் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் சுருக்கமாக பொதுஅறிவு வடிவில் தரப்பட்டுள்ளன. இந்நூல் புன்னியாமீன் எழுதி வெளியிட்ட 99வது நூலாகும். இது சிந்தனைவட்டத்தின் 228வது வெளியீடாக வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4013)



என்னால் எழுதி வெளிவந்த 100வது நூல் (நவம்பர் 2006)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், 
கலைஞர்களின் விபரத்திரட்டு - 
தொகுதி 4

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

..இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4. பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்னை: 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
176 பக்கம், விலை: ரூபா 260., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-55-3.

புன்னியாமீன் எழுதிவெளியிட்டுள்ள 100வது புத்தகம் இதுவாகும். இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி – 4 எனும் இப்புத்தகம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு முதலாம் பாகமாக வெளிவந்துள்ளது. ஈழத்தைப் பிறப் பிடமாகக் கொண்டு தற்போது பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள 25 பதிவுக் குறிப்புகளும் இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் நவமணி வார இதழில் 01.01.2006 முதல் 09-09-2006 வரை பிசுரமானவையாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4886)