Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (91 முதல் 95 வரை)


என்னால் எழுதி வெளிவந்த 91வது நூல் (செப்டெம்பர் 2005)

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: 
மூன்றாம் பாகம்.

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: மூன்றாம் பாகம். பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள், 14, உடத்தலவின்னை மடிக, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன் டிசைனர்ஸ், இல. 3 ஏ, பைரவகந்தை வீதி).
194 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 20.5 X 14..5 சமீ., ISBN: 955-8913-20-0.

சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடு. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில், முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து வெளிவந்த தொடரில் இடம்பெற்ற 36 பேரின் விபரங்கள் (பதிவுகள் 78-114) புகைப்படங்களுடன் இம்மூன்றாம் பாகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக மலையகப் பதிப்புலகத்தில் சிந்தனைவட்டம், கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் (என்.செல்வராஜா), சிந்தனை வட்டம் ஓர் ஆய்வு (என்.செல்வராஜா), ஒரே பார்வையில் சிந்தனை வட்டம் வெளியீடுகள் (2005 செப்டெம்பர் 11 வரை வெளியான 207 நூல்களின் விபரங்கள்), சிந்தனை வட்டம் பணிப்பாளர்களில் ஒருவரான மஸீதா புன்னியாமீன் அவர்களின் தாயார், சகோதரி, அவரது குழந்தைகள், என சுனாமிப் பேரலையில் இழந்த உறவுகளுக்கான கண்ணீர் அஞ்சலிக் கவிதையும் இடம்பெற்றுள்ளன. முன்னுரையில் இத்தகையதொரு தொகுதியின் தேவை பற்றிய ஆய்வுரீதியான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3 (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3920)



எனது 92வது நூல் (செப்டெம்பர் 2005)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 42 வது நூல்

தரம் 4 புலமை விருட்சம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 4 புலமை விருட்சம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கண்டி: கிரியேடிவ் பதிப்பகம், 3A பஹிரவாகந்த வீதி).
56 பக்கம், படங்கள், சித்திரங்கள, விலை: ரூபா 97.50, அளவு 27.5 X 21 சமீ., ISBN: 955-8913-27-8

சிந்தனைவட்டத்தின் 208வது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் புலமைப்பரிசில் பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி தரம் 4 பாடப்பரப்பினை அடிப்படையாகக் கொண்ட மாதிரி வினாப்பத் திரங்களை உள்ளடக்கிய நூலாகும். தரம் 4ல் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறாவிடினும் கூட தரம் 5ல் இடம்பெறக் கூடிய புலமைப்பரிசில் பரீட்சையில் தரம் 4 பாட அலகுகளும் கணிசமாக இடம்பெறலாம். இதனைக் கருத்திற் கொண்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4306)


 எனது 93வது நூல் (பெப்ரவரி 2006)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 43 வது நூல்


2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1)
.

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (Katugastota: J.J. Printers , 122, Kurunegala Rd ).
58 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110.,அளவு 27X21.5சமீ., ISBN: 955-8913-31-6.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 216வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் கணிதப் பாடப் பரப்பில் இடம்பெறக்கூடிய ஆரம்ப விளக்கக்குறிப்புகளும் ஆறு மாதிரி வினாத்தாள்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் வகையில் எளிமையான நடையில் இந்நூல் எழுதப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4285)



எனது 94வது நூல் (பெப்ரவரி 2006)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 44 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (Katugastota: J.J. Printers , 122, Kurunegala Rd ).
80 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 21X14.5 சமீ. ISBN: 955-8913-32-4

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 217வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்கப் பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் ஆரம்ப ஆங்கிலம் பற்றிய சுருக்கக் குறிப்புகளும், நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. வழமையான புத்தக வடிவமைப்புக்கு மாறாக இடமிருந்து வலமாகப் புத்தகத்தைப் பார்க்கக்கூடிய வகையில் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4266)



 எனது 95வது நூல் (மே 2006)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 45 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122, Kurunegala Rd ).
96 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110 அளவு 27X21.5 சமீ., ISBN: 955-8913-33-2.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 219வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் மாதிரிவினாத்தாள்களுடன், கணிதப் பாடப்பரப்பின் பின்னைய பகுதிகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக விளங்கக் கூடிய வகையில் எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4267)