Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (101 முதல் 105 வரை)


 என்னால் எழுதி வெளிவந்த 101 வது நூல் (ஒக்டோபர் 2006)


பொது அறிவு - நிகழ்காலத் தகவல் துளிகள் (தொகுதி 01)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

... பொது அறிவு - நிகழ்காலத் தகவல் துளிகள் (தொகுதி 01). பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே)
40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-58-8)

சமகால பொதுஅறிவு விடயங்களை இந்நூல் தொகுத்துத் தந்துள்ளது. தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற பல நிகழ்வுகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் சிந்தனைவட்டத்தின் 233வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4008)



என்னால் எழுதி வெளிவந்த 102 வது நூல் (ஒக்டோபர் 2006)

பொது அறிவுச்சரம் (தொகுதி 04)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

... பொது அறிவுச்சரம் (தொகுதி 04). பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே)
40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-53-7)

இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதியும், பொதுஅறிவினை கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் புராதன இலங்கையின் வெளிநாட்டு உறவுகளும், அரசியல் தாபனங்கள், சமூகத் தாபனங்களும், நவீன காலத்தில் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் விபரங்களும், நிகழ்கால விளையாட்டுத் தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல் சிந்தனைவட்டத்தின் 229வது வெளியீடாக வெளி வந்துள்ளது. ((நூல்தேட்டம் பதிவிலக்கம் 4013)



என்னால் எழுதி வெளிவந்த 103 வது நூல் (ஒக்டோபர் 2006)

பொது அறிவுச்சரம் (தொகுதி 05).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

... பொது அறிவுச்சரம் (தொகுதி 05). பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-56-1)

இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதியும், பொதுஅறிவினைக் கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கையின் முக்கியமான நிகழ்காலத் தரவுகள், இலங்கை வரலாற்றில் முக்கியமான ஆண்டுகளும், முக்கிய நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ((நூல்தேட்டம் பதிவிலக்கம் 4014)



 என்னால் எழுதி வெளிவந்த 104 வது நூல் (ஒக்டோபர் 2006)

பொது அறிவுச்சரம் (தொகுதி 06) .

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

... பொது அறிவுச்சரம் (தொகுதி 06). பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-57-X)

இலங்கையில் நடைபெறக் கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன் கருதியும், பொதுஅறிவினை கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந் நூலில் சர்வதேச ரீதியில் அண்மைக் காலமாக இடம்பெற்ற முக்கிய விடயங்களும், முக்கிய தலைவர்கள், நூல்கள் என்பன பற்றிய விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4015)



எனது 105வது நூல் (நவம்பர் 2006)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 47 வது நூல்

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1).

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006, (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 97., அளவு 21X14 சமீ. ISBN: 955-8913-42-1

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது, சித்தியடையும் மாணவர்களுக்கு உபகாரப்பணம் மாதந்தோறும் வழங்கப்படுவதினாலும் நகர்புறங்களிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படு வதினாலும் இலங்கையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. 2007ம் ஆண்டு இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக எழுதப்பட்டதே மேற்படி நூலாகும். இது சிந்தனைவட்டத்தின் 237வது வெளியீடாகும். அதேபோல நூலாசிரியை மஸீதா புன்னியாமீன் எழுதி வெளியிடும் 50வது நூலுமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4269)