Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (41 முதல் 45 வரை)


என்னால் எழுதி வெளிவந்த 41 வது நூல் (நவம்பர் 1997)

அரசறிவியல் மூலதத்துவங்கள்: பல்தேர்வு மாதிரி வினாவிடைத் தொகுதி 1. (அரசியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அரசறிவியல் மூலதத்துவங்கள்: பல்தேர்வு மாதிரி வினா விடைத் தொகுதி 1. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 12: Aico Ltd, 218/5, Messenger Street). 96 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 28X21.5 சமீ.

1997ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடப்பரப்பில் முதற்தடவையாக பல்தேர்வு வினாக்கள் (MCQ) வினாப்பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இவ் வினாப் பத்திரத்திற்கேற்ற வகையில் முழுமையான பாடப்பரப்பினை உள்ளடக்கி மாணவர்களின் நுணுக்க அவதானிப்பு, ஞாபகத்திறன் என்பவற்றை அளவிடக்கூடிய வகையில் இந்நூல் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் 10 மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. அரசறிவியல் மாணவர்களுக்கென இலங்கையிலே தமிழ்மொழி மூலம்வெளிவந்த முதலாவது பல்தேர்வு வினாவிடைத் தொகுதி இதுவென்று கருதப்படுகின்றது. இந்நூல் சிந்தனைவட்டத்தின் 72வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3185)

 
 என்னால் எழுதி வெளிவந்த 42வது நூல் (பெப்ரவரி 1998)

அரசறிவியல் மூலதத்துவங்கள்: பரீட்சை மாதிரி வினாவிடை 1998 
- அரசியல் நூல்

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அரசறிவியல் மூலதத்துவங்கள்: பரீட்சை மாதிரி வினா விடை 1998. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கட்டுகஸ்தொட்டை: J.J.Printers, 122, Kurunegala Road). 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 28X21.5 சமீ.

1997ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட க.பொ.த. உயர்தர மாணவர் களுக்கான அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடப்பரப்பில் இடம்பெறும் வினாக்களுக்கு விடை எழுதக்கூடிய வகையில் பரீட்சை மாதிரி வினாவிடை 1998 என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் புதிய பாடத்திட்டத்திற்கமைய பகுதி 1, 2 ஆகிய இரு வினாப் பத்திரங்களிலும் வினாக்கள் எவ்வாறு அமையும், விடைகள் எவ்வாறு வழங்க வேண்டும் என்பன போன்ற விளக்கங்கள் எளிய நடையில் இதன் நூலாசிரியர் புன்னியாமீன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3184)



 எனது 43வது நூல் (பெப்ரவரி 1998)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 7 வது நூல்

அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 1. (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 1. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன,1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப் பரிசில் வழிகாட்டித் தொடர் 4. ஆண்டு 4, 5 புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. இத் தொகுதி நாமும் சூழலும், தாவரங்கள், விலங்குகள், மண் ஆகிய நான்கு பாடங்களை உள்ளடக்கியது. தேவையான இடங்களில் புகைப்படங்களும், சித்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2338)



எனது 44வது நூல் (ஏப்ரல் 1998)
 
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 8 வது நூல்

அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 2. (1வது பதிப்பு) வழிகாட்டி நூல்

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள ...நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன்,  மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
64 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் 5. ஆண்டு 4, 5 புதிய பாடத் திட்டத்தை உள்ளடக்கியது. இத்தொகுதி நாமும் சூழலும், தாவரங்கள், விலங்குகள், மண் ஆகிய நான்கு பாடங்களை உள்ளடக்கியது. தேவையான இடங்களில் புகைப்படங்களும், சித்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2339)
 

எனது 45வது நூல் (ஏப்ரல் 1998)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 9 வது நூல்

நாமும் சுற்றாடலும்: தொகுதி 1. (1வது பதிப்பு) வழிகாட்டி நூல்

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்...ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

நாமும் சுற்றாடலும்: தொகுதி 1. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் 6. ஆண்டு 4, 5 புதிய பாடத் திட்டத்தை உள்ளடக்கியது. இத்தொகுதி எமது அயலில் காணப்படும் தாவரங்கள், பிராணிகள், சுற்றாடலின் கோலங்கள், புவியும் வானும், வேலைகளை இலகுவாக்கும் முறைகள், எமது உணவு, எமது பரிபாலன முறைகள் ஆகிய பாட அலகுகளை உள்ளடக்கியுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2342)