Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (86 முதல் 90 வரை)


என்னால் எழுதி வெளிவந்த 86வது நூல் (ஏப்ரல் 2005)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 37 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-39-1.

சிந்தனை வட்டத்தின் 198வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். மாணவர்களுக்கு எழக்கூடிய கணிதம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தெளிவான விளக்கத்தை இவ்வழிகாட்டி நூல் வழங்குகின்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் கணிதம் ஒரு தனி வினாத்தாளாக இடம்பெறாவிடினும் கூட பகுதி 1 இல் தர்க்க ரீதியான, புலமை ரீதியான கணித அறிவு அளவிடப்படும். அதற்கேற்ற வகையில் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல் தேட்டம் பதிவிலக்கம் 2007)



 எனது 87வது நூல் (ஏப்ரல் 2005)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 38 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-40-5

சிந்தனை வட்டத்தின் 199வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் பத்து இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆக்கத் திறனை விருத்திசெய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இப்புத்தகத்தில் இலங்கையின் தேசிய பறவையான காட்டுக்கோழி பற்றியும், தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் பற்றியும், தேசிய மலரான நீலோற்பலம் (நீலஅல்லி) பற்றியும், தேசிய மரமான நாகமரம் பற்றியும் குறிப்புகள் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2008)


எனது 88வது நூல் (ஏப்ரல் 2005)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 39 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-22-7.

சிந்தனை வட்டத்தின் 201வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். பாடரீதியான எவ்வளவு விளக்கங்களை மாணவர்கள் பெற்றாலும்கூட பரீட்சையொன்றில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியெய்த பயிற்சி அவசியமானது. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்துகளையும் முகமாக பத்து மாதிரி வினாத்தாள்களை (பகுதி1, பகுதி 2) உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2009)




எனது 89 வது நூல் (ஏப்ரல் 2005)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 40 வது நூல்


2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4 (வழிகாட்டி நூல்)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
80 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 21X13.5 சமீ., ISBN: 955-8913-23-5.

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி இறுதித் தொகுதியான (4வது தொகுதி) இத்தொகுதியில் பரீட்சையை மையப்படுத்திய சகல பாட அலகுகளும் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்களின் நுண்ணறிவை விருத்திசெய்யக்கூடிய வகையில் பயிற்சிகளும், குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கையிலேயே ஆகக்கூடுதலான தரம் 5 புலமைப்பரிசில் நூல்களை வெளியிட்டுவரும் சிந்தனை வட்டத்தின் 202வது வெளியீடு இது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2010)



எனது 90வது நூல் (ஜூலை 2005)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 41 வது நூல்

புலமைச் சுடர் 03 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர் 03. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜூலை 2005. (கண்டி: கிரியேடிவ் பதிப்பகம், 3A பஹிரவாகந்த வீதி).
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 20X14 சமீ. ISBN : 955-8913-24-3.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 205வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. விளக்கப்படங்களுடன் குறிப்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்களில் இடம்பெறக் கூடிய எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த வினாக்களுக்கு விடையெழுதக் கூடிய முறைகள் இலகுவாக முன்வைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4307)