Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (81 முதல் 85 வரை)


 எனது 81வது நூல் (ஜுலை 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 34 வது நூல்


புலமைச் சுடர் 02 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர் 02. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2004. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே. பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).
80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20X14 சமீ.

சிந்தனை வட்டத்தின் 188வது வெளியீடு. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பகுதி 1,2 ஆகியவற்றில் இடம்பெறும் வினாக்களைத் தழுவிய வழிகாட்டலாக குறிப்பேடுகள் இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3007)



என்னால் எழுதி வெளிவந்த 82வது நூல் (ஆகஸ்ட் 2004)

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: முதலாம் பாகம்.

(வரலாற்றுப் பதிவு நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு: முதலாம் பாகம். பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2004. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன் டிசைனர்ஸ், இல.3 ஏ, பைரவகந்தை வீதி).
(4), 170 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21X14.5 சமீ.,
ISBN: 955-8913-14-6.

சிந்தனை வட்டத்தின் 189வது வெளியீடு. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில், 10-08-2003 முதல் 15-02-2004 வரை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் ஒரு தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து தொடர் கட்டுரையாக வெளிவந்தது. அத்தொடரில் இடம்பெற்ற 36 பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2810)


என்னால் எழுதி வெளிவந்த 83வது நூல் (செப்டெம்பர் 2004)

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: இரண்டாம் பாகம். 
(வரலாற்றுப் பதிவு நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்...டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு: இரண்டாம் பாகம். பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன் டிசைனர்ஸ், இல. 3 ஏ, பைரவகந்தை வீதி).
(2), 155 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21X14..5 சமீ., ISBN: 955-8913-16-2.

சிந்தனை வட்டத்தின் 193வது வெளியீடு. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில்,  22.02.2004 முதல் 22.08.2004 வரை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து வெளிவந்த தொடரில் இடம்பெற்ற 40பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் இவ்விரண்டாம் பாகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2811)




 என்னால் எழுதி வெளிவந்த 84 வது நூல் (செப்டெம்பர் 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 35 வது நூல்

புலமைப்பரிசில் புலமைத் தீபம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் புலமைத் தீபம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (Kandy: Creative Printers & Designers, No.3/A Bahiravakanda Road)
240 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28X21.5 சமீ., ISBN: 955-8913-17-0.

சிந்தனை வட்டத்தின் 190வது வெளியீடு. 2005 ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 30 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2004 ஆகஸ்ட் அரசாங்க வினாப்பத்திரமும் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2020)



என்னால் எழுதி வெளிவந்த 85வது நூல் (ஒக்டோபர் 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 36 வது நூல்


தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (வழிகாட்டி நூல்)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை)
(2), 78 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 27X21 சமீ., ISBN: 955-8913-38-4

இது சிந்தனை வட்டத்தின் 195வது வெளியீடு. 2005ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தரம் 04 க்குரிய மாணவர் வழிகாட்டி. மாதிரி வினாப்பத்திரங்களும் விடைக ளும் கொண்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய மதிப்பெண்களை எவ்வாறு பெறலாம் என்ற அறிவுரை மிகவும் எளிய நடையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3004)