Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (76 முதல் 80 வரை)

 என்னால் எழுதி வெளிவந்த 76வது நூல் (மார்ச் 2004)

மர்ஹூம் எம்.வை.அப்துல் ஹமீட் - வரலாற்றுக் குறிப்புகள் 
(வரலாறு )

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து

மர்ஹூம் எம்.வை. அப்துல் ஹமீட்: வரலாற்றுக் குறிப்புகள். பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மார்ச் 2004. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ், 3A, பைரவகந்த வீதி)
48பக்கம், விலை: குறிப்பிடப்பட வில்லை, அளவு: 18X12.5 சமீ.

மத்திய மாகாணத்தில் பல விடயங்களில். குறிப்பாக அறிவியல் ரீதியில் முன்மாதிரியாகத் திகழும் முஸ்லிம் கிராமங்களுள் ஒன்றான உடத்தலவின்னை மடிகேயின் விழிப்புணர்வுகளுக்கும், எழுச்சிக்கும் சமூக மாற்றங்களுக்கும் காலாக அமைந்த சமூகப் பெரியாரும், மத போதகருமான அல்ஹாஜ் எம்.வை.அப்துல் ஹமீட் அவர்கள் மரணித்த பின்பு அவரின் சேவைகளையும், பண்புகளையும் ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இதுவாகும். சிந்தனை வட்டத்தின் 184வது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் ஒரு முன்னோடிப் போதகரின் வாழ்க்கைச் சுவடுகளை அடியொற்றி இளம் தலைமுறையினருக்கு படிப்பினையூட்டுவதாக அமைகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2839)



எனது 77 வது நூல் (மார்ச் 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 30 வது நூல்

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ. ISBN: 955-8913-09-X

சிந்தனை வட்டத்தின் 182வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் கொண்டது. இலங்கையில் நடைபெறக் கூடிய போட்டிப் பரீட்சைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் முதலாவது போட்டிப் பரீட்சை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையாகும். இப்பரீட்சையானது பகுதி 1, பகுதி 2 ஆகிய இரண்டு வினாப்பத்திரங்களைக் கொண்டது. மாணவர்களின் திறனை அளவிடுவது இப்பரீட்சையின் நோக்கம். இதனைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் திறன்களை படிப்படியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2003)



எனது 78வது நூல் (ஏப்ரல் 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 31 வது நூல்

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ. ISBN: 955-8913-10-3

சிந்தனை வட்டத்தின் 183வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட் டுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் முதலாம் பகுதியில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்ää அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட் டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2004)



எனது 79 வது நூல் (மே 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 32 வது நூல்

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5 X 20.5 சமீ., ISBN: 955-8913-11-1

சிந்தனை வட்டத்தின் 185வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் கொண்டது. அரசாங்கப் பரீட்சையில் பகுதி 2 இல் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம்2005)



எனது 80வது நூல் (மே 2004)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 33 வது நூல்

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ., ISBN: 955-8913-12-X

சிந்தனை வட்டத்தின் 187வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் உள்ளடங்கியுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் வசன அடிப்படையில் எழுத வேண்டிய கட்டுரையின் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2006)