Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (71 முதல் 75 வரை)


எனது 71வது நூல் (நவம்பர் 2002)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 27 வது நூல்

புலமைப்பரிசில் விவேகக்களஞ்சியம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 6வது பதிப்பு, மார்ச் 2004. 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
(26), 190 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 28X21.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் 177வது வெளியீடு. 2003ம் ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும், விடைகளும் அடங்கியுள்ளன. 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2021)




எனது 72வது நூல் (ஜனவரி 2003)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 28 வது நூல்

2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2ம் பதிப்பு, பெப்ரவரி 2003, 1வது பதிப்பு, ஜனவரி 2003. Print Com (Pvt) Ltd., 134 Hulfsdrop Street)
152 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 210., அளவு 28X21.5 சமீ.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 153வது வெளியீடாக முதலாம் பதிப்பும், 159வது வெளியீடாக 2வது பதிப்பும் வெளிவந்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2003ம் ஆண்டிலும், அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கற்றலை இலகுவாக்கும் முறையில் வழிகாட்டி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. 24 மாதிரி வினாப்பத்திரங்கள் (பகுதி 1இல் 12 வினாப்பத்திரங்களும், பகுதி 2ல் 12 வினாப்பத்திரங்களும்) சேர்க்கப்பட்டுள்ளன. 2002; ஆகஸ்ட் 10ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 91 மாணவமணிகளின் பெயரப்பட்டியலின் முதல் தொகுதி இந்நூலில் பிரிசுரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4275)



எனது 73வது நூல் (மார்ச் 2003)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 29 வது நூல்

புலமைச் சுடர் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2003. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே.பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).
80 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20.5X14 சமீ.

சிந்தனை வட்டத்தின் 164வது வெளியீடு. 2003ஆம் ஆண்டிலும் அதன் பின்பும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2015)



என்னால் எழுதி வெளிவந்த 74வது நூல் (நவம்பர் 2003)

அரசறிவியல் (அரசியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

.அரசறிவியல். பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (Katugastota: J.J. Printers , 122 , Kurunegala Rd)
248 பக்கம், விலை: ரூபா 260., அளவு 21x14.5 சமீ.

க.பொ.த. (உ/த), பல்கலைக்கழக முதற்கலைத் தேர்வு, பல்கலைக் கழக பொதுக்கலைத்தேர்வு ஆகிய பரீட்சையை எழுதவுள்ள அரசறிவியல் மாணவர்களின் நலன் கருதி எழுதப்பட்ட நூல் இது. பாடரீதியான குறிப்புக்கள் வினா - விடை வடிவில் தொகுத்து எளியநடையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். இது சிந்தனை வட்டத்தின் 173வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4178)



என்னால் எழுதி வெளிவந்த 75 வது நூல் (ஜூலை 2003)

இனி இதற்குப் பிறகு… (சிறுகதைத் தொகுதி)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

இனி இதற்குப் பிறகு … பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜூலை 2003. (கொழும்பு 12, Print Com (Pvt) Ltd, 134 , Hulfsdorp Street )
120 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5X14 சமீ., ISBN: 955-8913-03-0

புன்னியாமீனின் ஏழாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். 1990 – 2000 ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், தாமரை (இந்தியா) உட்பட இலங்கை, இந்திய சஞ்சிகைகளிலும் பிரசுரமான 11 சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4565)