Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (66 முதல் 70 வரை)


என்னால் எழுதி வெளிவந்த 66வது நூல் (நவம்பர் 2001)

ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: 
உலக சமாதானத்துக்கான அறைகூவலா? 
மூன்றாம் உலகமகா யுத்தத்திற்கான அத்திவாரமா?
 (ஆய்வு நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல் தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: உலக சமாதானத்துக்கான அறைகூவலா? மூன்றாம் உலகமகா யுத்தத்திற்கான அத்திவாரமா? பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (Colombo 12: Print Com, 134, Hulftsfrop Street).
126 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 22X15 சமீ.

11.09.2001ம் திகதி அமெரிக்காவின் நியுயோர்க்கில் உலக வர்த்தக நிலையத்தின் மேல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உண்மையான குற்றவாளியை உலகுக்கு ஆதாரபூர்வமாக இனம்காட்டாது ஊகங்களை வைத்து இன்று அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளின் மேல் தொடுத்திருக்கும் திட்டமிட்ட யுத்த நெருக்குதல்களையும் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2902)



எனது 67வது நூல் (டிசம்பர் 20)01)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 25 வது நூல்

புலமைப்பரிசில் விவேகச் சுரங்கம் (வழிகாட்டி நூல்)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, மார்ச் 2002. 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
152 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 28X21.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் 128வது வெளியீடு. 2002ம் ஆண்டிலும், அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2001 ஆகஸ்ட் 12ம் திகதி நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 160 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களின் ஒரு தொகுதிப் புகைப்படங்கள் நூலின் அட்டையை அலங்கரிக்கின்றன. 2002 புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2022)



என்னால் எழுதி வெளிவந்த 68வது நூல் (ஜனவரி 2002)

சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 
12வது பாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? (அரசியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல் தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).
108 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 120., அளவு: 20X14.5 சமீ.

2001ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அரசியல் ஆய்வு. தேர்தல் முடிவுகள் விபரமாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. அரசியலை அறிந்துகொள்ள விரும்புவோருக்கும், B.A., G.A.Q., G.C.E.(A/L) அரசறிவியல் மாணவர்களுக்கும் இந்நூல் ஏற்புடையது. சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம் கொதிநிலையில் நிற்கும் இனப்பிரச்சினைக்கு விடிவுகாணுமா என்ற பிரதான கேள்விக்கு இந்நூலாசிரியர் பதில் சொல்ல முனைகிறார். குறிப்பாக இலங்கை அரசியல் வரலாற்றின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒரு கட்சியையும், பிரதம மந்திரி மற்றுமொரு கட்சியையும் சேர்ந்த நிலை 12வது பாராளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது. இத்தகைய நிலையின் அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2205)



2001-12-05 ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 12வது பாராளுமன்றத் பொதுத்தேர்தலின் போது இடம்பெற்ற படுகொலைகள்

2001-12-05 ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 12வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தினத்தன்று கண்டி தேர்தல் மாவட்டத்தில் பாத்ததும்பறை தொகுதியில் '...மடவளை பஸார்' எனும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பத்து முஸ்லிம் இளைஞர்கள் 'பள்ளேத்தலவின்னை' எனுமிடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இதுவொரு ஒரு கறைபடிந்த அத்தியாயமாகும்.

தம் உயிர் நீத்து …ஜனநாயக உரிமை காத்த அந்தப் பத்துப் பேருக்கும் என்னுடைய 68வது நூலை சமர்ப்பணம்; செய்திருந்தேன்.

படுகொலை செய்யப்பட்டோர் வருமாறு
ஸபா அஹமட் , ஏ.எம். றிஸ்வான், எம். ஐ.எம்.அஸ்வர், எம்.எஸ்.நஸார், எம்.எச்.எம்.றிஸ்வான், ஜே.எம்.பஸீல் முஹம்மட், எம்.ஆர்.எம். நஸ்மி, டீ.எம்.பைஸால், முஹம்மட் மிர்ஸான், எம். மொஹிடீன்.

இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் கொலை செய்யப்பட்ட பத்துப் பேரினதும் ஆகும். ‘சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?’ எனும் நூலின் பின்புற அட்டையில் இப்படங்களைச் சேர்த்திருந்தேன்.


எனது 69வது நூல் (ஏப்ரல் 2002)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 26 வது நூல்

மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5.
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 7வது பதிப்பு, மே 2005, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருணாகலை வீதி).
36 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 15X10.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெறக்கூடிய வசனக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட 26 கட்டுரைகள் சேர்க்கப்பட் டுள்ளன. இலங்கையில், வசனக் கட்டுரை அடிப்படையில் தரம் 5 மாணவர்களுக்காக வெளிவந்த முதல் நூல் இதுவென்று கருதப்படுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3305)



என்னால் எழுதி வெளிவந்த 70வது நூல் (ஜுன் 2002)

மத்திய மாகாண சபையில் 
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த 
அமைச்சரவைப் பதவிக்கு சாவுமணி: 
உரிமை பறிக்கப்பட்ட பின்பும் ஏன் இன்னும் மௌனம்? (அரசியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மத்திய மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி வந்த அமைச்சரவைப் பதவிக்கு சாவுமணி: உரிமை பறிக்கப்பட்ட பின்பும் ஏன் இன்னும் மௌனம்? பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: மத்திய இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம், இல.14, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, ஜுன் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை)
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

மத்திய மாகாணத்தில் சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். இவர்களுள் 80சத வீதத்தினர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள். இருப்பினும் மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்திவந்த அமைச்சரவைப் பதவியை ஐக்கிய தேசிய முன்னணி பறித்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கற்றறிந்து கொள்ள ஏதுவாக இப்பிரச்சினையின் போக்கினையும், தன்மையினையும் ஆவணப்படுத்தும் வகையில் உருவான நூல். தேசியப் பத்திரிகைகள், ஊடகங்களில் வெளியான அறிக்கைகள், செய்திகளின் தொகுப்பு. (நூல்தேட்டம் பதிவிலக்கம்2217)