Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (61 முதல் 65 வரை)


  எனது 61வது நூல்  (ஆகஸ்ட் 2000)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 21 வது நூல்

புலமைப்பரிசில் வெற்றி ஒளி (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் வெற்றி ஒளி. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, நவம்பர் 2001. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2000. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
280 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 28X21.5 சமீ.

2001-2002ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியது. இது சிந்தனை வட்டத்தின் 127வது வெளியீடு. பரீட்சையை எழுதக் கூடிய மாணவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையும், அதற்கேற்ப வினாப்பத்திரங்களினூடாக வழிநடத்தப்பட்டிருப்பதும் இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2023)


  எனது 62 வது நூல் (நவம்பர் 2000)

 2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் சிறுபான்மைச் சமூகத்தினரும். (அரசியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் சிறுபான்மைச் சமூகத்தினரும். பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு. நவம்பர் 2000. (கட்டுகஸ்தொட்ட: C.G.M. Express Print Shop, 127, மடவளை வீதி)
162 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 120., அளவு: 17X12.5 சமீ.

11வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அரசியல் ஆய்வு. அரசியல் கற்கையில் ஆர்வமுள்ளவர்களுக்கும், B.A., G.A.Q., G.C.E.(A/L) அரசறிவியல் மாணவர்களுக்கும் ஏற்புடையது. சிந்தனை வட்டத்தின் 114வது வெளியீடு. பத்தாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை அமைக்க சிறுபான்மை கட்சிகள் உறுதுணையாக நின்றன. அதேபோல பதினோராவது பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளும் சிறுபான்மைக் கட்சிகளின் முக்கி யத்துவத்தை உணர்த்தக் கூடிய வகையில் அமைந்திருந்தன. ஆனால், இலங்கையில் சிறுபான்மைப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளும், குறிப்பாக வடக்கு கிழக்கு சிறுபான்மையினத்தவர்களின் பிரச்சினைகளும் எவ்வாறு எதிர்நோக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2190)


  எனது 63வது நூல்  (ஏப்ரல் 2001)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 22 வது நூல்

புலமைப்பரிசில் சுடர்ஒளி (வழிகாட்டி நூல்)

.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் சுடர்ஒளி. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001, (Katugastota: J.J. Printers, 122, Kurunegala Road).

56 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 60.அளவு: 28X21.5 சமீ.

இந்நூல் 2001 – 2002 ஆண்டுகளிலும், அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவமணிகளின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ளது. தரம் 3 தரம் 4 பாடப்பரப்பை உள்ளடக்கி தரம் 5 புலமைப்பரிசில் வினாப்பத்திர மாதிரிக்கமைய 10 மாதிரி வினாத்தாள்கள் இந்நூலில் விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4309)

  எனது 64 வது நூல் (அக்டோபர் 2001)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 23 வது நூல்

 2002 புலமைப்பரிசில் புலமை ஒளி (வழிகாட்டி நூல்)

.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2002 புலமைப்பரிசில் புலமை ஒளி. பீ..எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, அக்டோபர் 2001. (Katugastota: J.J. Printers , 122, Kurunegala Rd)
200 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 190., அளவு 28X21.5 சமீ.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 124வது வெளியீடாகும். 2002ம் ஆண்டிலும்ää அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன்கருதி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நுணுக்கமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள 32 மாதிரி வினாப்பத்திரங்களுள் பகுதி 01 இல் 16 வினாப்பத்திரங்களும், பகுதி 02 இல் 16 வினாப்பத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சையொன்றில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் பத்து வயது மாணவர்கள் எவ்வாறு பரீட்சையை எழுத வேண்டும் என்ற விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2190)

எனது 65 வது நூல் (நவம்பர் 2001)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 24 வது நூல்

புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (வழிகாட்டி நூல்)

.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (அச்சக விபரம் தரப்பட வில்லை)
220 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 28X21.5 சமீ. 


சிந்தனை வட்டத்தின் 125வது வெளியீடு. 2002ம் ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2002 புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி போட்டிப் பரீட்சையொன்றிற்கான ஆயத்தத்தை மாணவர்களுக்கு வழங்கக் கூடியதாகவுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2024)