Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (56 முதல் 60 வரை)

 எனது 56வது நூல் (டிசம்பர் 1999)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 17 வது நூல்

புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி (வழிகாட்டி நூல்).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, ஜனவரி 2000, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கட்டுகஸ்தொட்ட: ஜே. ஜே.பிரின்டர்ஸ், 122 குருணாகலை வீதி).
60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது ஒன்றிணைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்கீழ் தரம் 3, தரம் 4 பாடப் பரப்புகளையும் தழுவியதாகவே பரீட்சை வினாக்கள் இடம்பெறும். எனவே அதற்கேற்ப தரம் 3, தரம் 4 பாடத்திட்டத்தைத் தழுவியதாகத் தயாரிக்கப்பட்ட மாணவர் வழிகாட்டி நூல் இதுவாகும். இந்நூலில் மொத்தமாக பத்து மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3008)


 என்னால் எழுதி வெளிவந்த 57வது நூல் (ஜனவரி 2000}

21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்: 
1999 ஜனாதிபதித் தேர்தல் ஒரு மதிப்பீடு (அரசியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்: 1999 ஜனாதிபதித் தேர்தல் ஒரு மதிப்பீடு. பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122, கலகெதர வீதி).
128 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 120., அளவு: 21.5X14 செ.மீ.

1999 டிசம்பர் 21ம் திகதி இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைப் பின்னணியாகக் கொண்டு வெளியிடப்பட்ட அரசறிவியல் ஆய்வுநூல். 21ம் நூற்றாண்டின் இலங்கையின் ஆரம்ப தலைமைத்துவத்தை 4வது சனாதிபதித் தேர்தலினூடாக மக்கள் தெரிவு செய்துவிட்டாலும் புத்தாயிரத்தின் தலைவாசலில் தடம்பதித்துள்ள இனவாதப் பிரச்சினைகள், பயங்கரவாதப் பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினைகள், பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை தலைமைத்துவம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் நடைபெற்ற நான்கு சனாதிபதித் தேர்தல் முடிவுகளையும் ஒரே பார்வையில் அவதானிக்கக் கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும். இது சிந்தனை வட்டத்தின் 95வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2194)


 எனது 58வது நூல் (மார்ச் 2000)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 18 வது நூல்

புலமைப்பரிசில் அறிவு ஒளி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் அறிவுஒளி - தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, மார்ச் 2000, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).
(4), 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.

தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினா-விடை. செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில் வினாப்பத்திரங்கள் 1முதல் 10 வரை அமைந்துள்ளன. சிந்தனை வட்டத்தின் 110வது வெளியீடு. மாணவர்களை படிப்படியாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் வழிகாட்டல் சேர்க்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2017)



னது 59வது நூல் (மே 2000)

ன் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 19 வது நூல்

புலமைப்பரிசில் அறிவுஒளி - தொகுதி 3. (வழிகாட்டி நூல்)

 ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் அறிவுஒளி - தொகுதி 3. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, ஜுன் 2000, 1வது பதிப்பு, மே 2000. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).
80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.

2001/2002ம் ஆண்டுகளில் தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும். செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில் வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளன. சிந்தனை வட்டத்தின் 111வது வெளியீடு. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2018)



எனது 60வது நூல் (ஆகஸ்ட் 2000)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 20 வது நூல்

புலமைப்பரிசில் அறிவுஒளி - தொகுதி 4 - வழிகாட்டி நூல்

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் அறிவுஒளி - தொகுதி 4. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கட்டுகஸ்தொட்ட: எக்ஸ்பிரஸ் பிரின்ட் ஷொப், மடவளை வீதி,)
(4), 68 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5X28 சமீ.

சிந்தனை வட்டத்தின் 108வது வெளியீடு. 2001/2002ம் ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. அரசாங்கப் பரீட்சைப் பற்றிய பயத்தினை மாணவர் மனங்களிலிருந்து நீக்குவதற்கு நூலாசிரியர்கள் பிரயத்தனப்பட்டிருப்ப தை அவதானிக்க முடிகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2019)