என்னால் எழுதி வெளிவந்த 51வது நூல் (ஜனவரி 1999)
அரசறிவியல்: முதற்கலைத் தேர்வு (அரசறிவியல் நூல்)
அரசறிவியல்: முதற்கலைத் தேர்வு (அரசறிவியல் நூல்)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
அரசறிவியல்: முதற்கலைத் தேர்வு. பீ.எம்.புன்னியாமீன். கண்டி: E.P.I. கல்வி நிலையம், 83, கட்டுகஸ்தோட்டை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (Katugastota: Golden Trade Centre and Communication, 125, Madawala Road)
126 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ.
GAQ முதற்கலைத் தேர்வு வெளிவாரி மாணவர்களுக்கு ஏற்ற 1985-1998 காலப்பகுதிக்குரிய பரீட்சை வினாக்களைக் கொண்ட பாட அலகுரீதியான தொகுப்பு. வினாக்களுக்கான விடைகளும் சுருக்க அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மட்டுமன்றி அரசறிவியலின் அடிப்படைகளை அறிந்துகொள்ளவிரும்பும் எவருக்கும் ஏற்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2185)
என்னால் எழுதி வெளிவந்த 52வது நூல் (ஜனவரி 1999)
B.A. அரசறிவியல்: பாடநூல்.
B.A. அரசறிவியல்: பாடநூல்.
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
B.A. அரசறிவியல்: பாடநூல். பீ.எம்.புன்னியாமீன். கண்டி: E.P.I, கல்வி நிலையம், 83, கட்டுகஸ்தோட்டை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (Kandy: MECK Computer Lab., 127/2/2 Kotugodella Veediya).
126 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X 13.5 சமீ.
பேராதனைப் பல்கலைக்கழக பொதுக் கலைமானி (B.A.) வெளிவாரி மாணவர்களின் நலன்கருதி, அரசறிவியல் பாடத்துக்காக வெளியிடப்பட்ட நூல். 1990ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை இடம்பெற்ற பரீட்சை வினாக்கள், பாட அலகு ரீதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ் வினாக்களுக்கான விடைகளும் சுருக்கக் குறிப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. அரசறிவியல் சமூகக் கோட்பாடுகள், இலங்கை அரசாங்கம், பொதுத்துறை ஆட்சியியல், ஆகிய தலைப்புகளில் விடயங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2212)
எனது 53வது நூல் (ஜனவரி 1999)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 15 வது நூல்
புலமைப்பரிசில் வழிகாட்டிக்களஞ்சியம். (வழிகாட்டி நூல்)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 15 வது நூல்
புலமைப்பரிசில் வழிகாட்டிக்களஞ்சியம். (வழிகாட்டி நூல்)
புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802, சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 3ம் பதிப்பு: அக்டோபர் 2002, 1வது பதிப்பு: ஜனவரி 1999. 64 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி தரம் 4, தரம் 5 பாடத்திட்டத்தைத் தழுவிய குறிப்புகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்புக்களை எளிமையாக மாணவர்கள் விளங்கத்தக்க வகையில் பொருத்தமான இடங்களில் புகைப்படங்களையும், சித்திரங்களையும் சேர்த்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4311)
(படம் 3ம் பதிப்புக்குரியது)
என்னால் எழுதி வெளிவந்த 54வது நூல் (மார்ச் 1999)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 16 வது நூல்
புலமைப்பரிசில் அறிவு ஒளி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்).
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 16 வது நூல்
புலமைப்பரிசில் அறிவு ஒளி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்).
புலமைப் பரிசில் அறிவு ஒளி: தொகுதி 1. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, மே 1999, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).
(5), 67 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.
தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினா-விடை. செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில் வினாப்பத்திரங்கள் 1முதல் 10 வரை அமைந்துள்ளன. சிந்தனை வட்டத்தின் 106வது வெளியீடு. மாணவர்களை கட்டம் கட்டமாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் நுணுக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2016)
என்னால் எழுதி வெளிவந்த 55வது நூல் (டிசம்பர் 1999)
மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கௌரவிப்பு விழா. (இலக்கிய நூல்)
மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கௌரவிப்பு விழா. (இலக்கிய நூல்)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கௌரவிப்பு விழா-1999. பீ.எம்.புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்). கண்டி: மத்திய மாகாண சபையின் முஸ்லிம் சமய விவகார அமைச்சு, த.பெ. இலக்கம் 65, பேராதனை, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கட்டுகாஸ்தோட்டை: ஜே.ஜே. அச்சகம், 122 கலகெதர வீதி). 96 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25X17.5 சமீ.
இலங்கையில் “மாகாணசபை முறை” அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மாகாண ரீதியான முஸ்லிம் கலாசார, கலைஞர் கௌரவிப்பு விழா மத்திய மாகாணத்தில் இன்றுவரை ஒரே ஒரு தடவை மாத்திரம் நடைபெற்றுள்ளது. மத்திய மாகாண சபையின் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளராக ஜனாப் பீ.எம்.புன்னியாமீன் பணியாற்றிய காலகட்டத்தில் 1999இல் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டது. இவ் விழாவில் கௌரவிக்கப்பட்ட 15 முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களும், ஐந்து தமிழ், சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. வர்த்தக விளம்பரங்கள் அற்று காத்திரமான பயனுள்ள பல இலக்கியக் கட்டுரைகளுடன் இம்மலர் வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2896)