Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (106 முதல் 110 வரை)


 எனது 106வது நூல் (நவம்பர் 2006)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 48 வது நூல்


2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2). பீ..எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம் அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா. 97., அளவு 21X14 சமீ., ISBN: 955-8913-43-X

கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் இணைந்து எழுதி வெளியிட்டுள்ள மற்றுமொரு புலமைப்பரிசில் நூல் இதுவாகும். தரம் 5 மாணவர்களின் பரீட்சையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்நூலில் விலங்குகள் பற்றியும்ää தமிழ் இலக்கணங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இது சிந்தனைவட்டத்தின் 235வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4270)


  
என்னால் எழுதி வெளிவந்த 107வது நூல் (டிசம்பர் 2006)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 5

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறி...ப்பிலிருந்து…

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 5.
பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
96 பக்கம், விலை: ரூபா 200., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-63-4.

இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் நவமணி வார இதழில் பிசுரமான 18 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் 140 முதல் 157 வரையிலான பதிவு எண்களைக் கொண்டு இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளன. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி – 5 ஆக வெளிவந்துள்ள இந்நூல் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் - 4 ஆகும். இந்நூலில் பதிவாக இடம்பெற்றுள்ள 18 பேரினதும் புகைப்படங்கள் பிரசுரமாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4887)


 
 என்னால் எழுதி வெளிவந்த 108வது நூல் (ஜனவரி 2007)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 6


ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

... இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 6. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை: 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
88 பக்கம், விலை: ரூபா 160., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-64-2.

சிந்தனைவட்டத்தின் 239வது வெளியீடு. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - 6ம் தொகுதி, இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்ää கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் - 5 ஆக வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் பதிவாகியுள்ள 14 பேரும் எம்மோடு வாழ்ந்து மரணித்தவர்கள். இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களும், இவர்கள் துறைசார்ந்த சாதனைகளும் புகைப்படங்களுடன் இவ்வாறாம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4888)




என்னால் எழுதி வெளிவந்த 109வது நூல் (பெப்ரவரி 2007)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 7

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறி...ப்பிலிருந்து…

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 7. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
112 பக்கம், விலை: ரூபா 210., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-65-0.

சிந்தனைவட்டத்தின் 241வது வெளியீடு. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 7ம் தொகுதி, இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் - 6 ஆக வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் 30 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரக்குறிப்புகள் 171 முதல் 200 வரையிலான பதிவுகளாக, இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களும், இவர்கள் துறைசார்ந்த சாதனைகளும் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4889)



என்னால் எழுதி வெளிவந்த 110வது நூல் (பெப்ரவரி 2007)

நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி.


ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவ...ுக் குறிப்பிலிருந்து…

நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007. (உடத்தலவின்னை: 20802:

சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .
54 பக்கம், விலை: ரூபா 70., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 978-955-8913-68-0.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களினால் ஈழத்தவர்களின் தமிழ்மொழி மூல நூல்கள் 4000, நூல்தேட்டம் என்ற பெயரில் நான்கு தொகுதிகளில் இதுவரை பதிவாக்கப்பட்டுள்ளன. அயோத்தி நூலக சேவைகள் வெளியீடான 'நூல்தேட்டம்' நான்கு தொகுதிகளையும் ஆராய்ந்து கலாபூஷணம் புன்னியாமீன் எழுதிய ஆய்வுக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் 'விளம்பரம்' பத்திரிகையில் 2006 ஆகஸ்ட் 15ம் திகதியும், செப்டெம்பர் 01ம் திகதியும் பிரசுரமானது. அதே கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஞானம்' சஞ்சிகையில் 2006 செப்டெம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய இதழ்களில் பிரசுரமாகின. லண்டனிலிருந்து வெளிவரும் 'சுடர் ஒளி' இருமாத சஞ்சிகையும் ஜனவரி 2007 இதழிலிருந்து தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்தது. அக்கட்டுரை இப்புத்தகத்தில் நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 01.01.2006 இல் இலங்கை முஸ்லிம்களின் வார இதழான 'நவமணி'யில் பிரசுரமான என். செல்வராஜா அவர்கள் பற்றிய குறிப்புக்களும்ää புன்னியாமீனின் 108 நூல்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4019).