என்னால் எழுதி வெளிவந்த ஆறாவது நூல் (1988)
பிரித்தானியாவின் அரசியல் முறை. (1வது பதிப்பு : ஜனவரி 1988) (7வது பதிப்பு: பெப்ரவரி 1997)
ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில்; பதிவாகியுள்ள குறிப்பில் இருந...்து…
பிரித்தானியாவின் அரசியல் முறை. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 7வது பதிப்பு, பெப்ரவரி 1997, 1வது பதிப்பு, ஜனவரி 1988.
(கொழும்பு 04: வி.கிருஷ்ணமூர்த்தி, 316, காலி வீதி). 48 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 21 X 14 சமீ.
உடத்தலவின்னை மடிகே சிந்தனைவட்டம் வெளியிட்ட முதலாவது நூல் ‘பிரித்தானியாவின் அரசியல் முறை’ எனும் நூலாகும். G.A.Q, G.C.E.(A/L) புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல். மாதிரி வினாக்களையும், சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது. பிரித்தானியாவின் அரசியலமைப்பு ஒரு வரையப்படாத யாப்பாகும். எழுத்துருப் பெறாத சட்டங்களாக விளங்கும் மரபுகளும், வழக்காறுகளும் பிரித்தானியா அரசாங்க முறையினை வழிநடத்திச் செல்லும் விதமும், பிரித்தானியப் பாராளுமன்றம், பிரபுக்கள் சபை, உள்@ராட்சி முறை, கட்சி முறை என்பன எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசியல் அமைப்புக்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும் இந்நூல் பொருந்தும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2213)
கிராமத்தில் ஒரு தீபம் (வரலாறு)
ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பில் இருந்து…
... கிராமத்தில் ஒரு தீபம். பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை: ஜமா அத்தார் சங்க பொன்விழா வைபவக் குழு, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 1988. (அக்குறனை: வை.எல்.அப்துல் பரீத், டிலான் பிரின்டர்ஸ், 438, மாத்தளை வீதி).
80 பக்கம், அளவு: 18X11 சமீ.
உடத்தலவின்ன மடிகே கிராமத்தில் கதீபாக (கிராமிய மார்க்கத் தலைவர்) ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் எம்.வை. அப்துல் ஹமீட் அவர்களது வாழ்க்கை வரலாறு. அவர் நிறுவிய உடத்தலவின்ன மடிகே கிராமத்தின் ஜமா அத்தார் சங்கத்தின் வரலாற்றையும் இந்நூல் பதிவு செய்கின்றது. கிராமிய மார்க்கத் தலைவர் ஒருவர் பற்றி வெளியாகும் முதல் நூல் என்ற வகையிலும், தமிழ் எழுத்துச் சீராக்கம் இலங்கையில் 1990இல் அறிமுகப்படுத்தப் படும் முன்னரே அதற்கமைய இலங்கையில் பதிப்பிக்கப்பட்ட முதல் நூல் என்ற வகையிலும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2817)
என்னால் எழுதி வெளிவந்த எட்டாவது நூல் (நவம்பர் 1989)
கரு (சிறுகதைத் தொகுதி)

கரு. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 13, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 1989. (அக்குறணை: நிலான் பதிப்பகம், 372/1 மாத்தளை வீதி).
76 பக்கம், விலை: ரூபா 15, அளவு: 18X12.5 சமீ.
ஆசிரியரின் 3வது சிறுகதைத் தொகுதி. இது எங்கள் காலம், திருப்பங்கள், திருப்பங்களும் முடிவுகளும், பெருநாள் உதயம், அரியணை ஏறிய அரசமரம் ஆகிய 5 நெடுங்கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள மூடநம்பிக்கைகள், சீதனக் கொடுமை போன்ற எண்ணக் கருக்களை கதைகளாக இந்நூலில் பதித்துள்ளார். மண்ணில் கால் வைத்து விண்ணில் தலை வைத்திருக்கும் கற்பனாவாதியாக அல்லாமல் புழுதியில் கால் பதித்து, நிலத்திலே பார்வை பதித்துள்ள இவரின் இக்கதைகள் யதார்த்தபூர்வமானவை. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2606)
என்னால் எழுதி வெளிவந்த ஒன்பதாவது நூல் (ஜனவரி 1990)
அந்த நிலை (சிறுகதைத் தொகுதி)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…
அந்த நிலை. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 13, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (அக்குறணை: எம்.வை.எம்.சலீம், நீலான் பிரின்டர்ஸ், 372/1, மாத்தளை வீதி).
96 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18X12.5 சமீ.
ஆசிரியரின் மூன்று நெடுங்கதைகள் கொண்ட தொகுப்பு. போலிகளை நம்பி ஏமாறாது புத்திபூர்வமாக அவற்றை எதிர்கொண்டு வெல்லும் பெண்ணின் கதையாக வேதமோதும் சாத்தான்கள் என்ற கதையும், செய்யும் தொழிலிலே திருப்திகண்டு உயரும் ஒருவனது கதையாக இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு என்ற கதையும் திருமணங்களில் சுயகௌரவத்திற்காக நுழைக்கப்படும் ஆடம்பரங்கள் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அந்த நிலை என்ற தலைப்புக் கதையும் அமைகின்றன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2661)
என்னால் எழுதி வெளிவந்த 10வது நூல் (பெப்ரவரி 1990)
நெருடல்கள் (சிறுகதைத் தொகுதி)

நெருடல்கள். பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 13, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்னை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (அக்குறணை: எம்.வை.எம். சலீம், நிலான் அச்சகம், 372/1 மாத்தளை வீதி).
80 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 18X12 சமீ.
ஆசிரியரின் 10வது நூல். நெருடல்கள், சம்பாத்தியம் என்னும் இரு நெடுங்கதைகளையும், துரோகத்தின் விளைவு, தியாகம், மன்னிப்பு, வெற்றி ஆகிய நான்கு உருவகக் கதைகளையும் கொண்ட தொகுப்பு. இலங்கையில் முஸ்லிம்கள் வியாபாரத்துறையில் காட்டும் ஆர்வம் கல்வித்துறையில் காட்டுவதில்லை என்ற சமூகப் பிரச்சினையொன்றை இரண்டு நெடுங்கதைகளும் அலசுகின்றன. இது சிந்தனை வட்டத்தின் 6வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2636)

என்னால் எழுதி வெளிவந்த ஏழாவது நூல் (நவம்பர் 1988)