Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (1 முதல் 5 வரை)


என்னால் எழுதி வெளிவந்த நான்காவது நூல் (மே 1987)
இலக்கிய உலா (இலக்கியத் திறனாய்வு)

ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பில் இருந்து…


இலக்கிய உலா. பீ.எம்.புன்னியாமீன். சென்னை 600001: மில்லத் பப்ளிகேஷன்ஸ், 16, அப்பு மேஸ்திரி தெரு, 1வது பதிப்பு, மே 1987. (Madras 600001: Millath Printers, 16, Appu Maistry Street. 148 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 20. அளவு: 18X12.5 சமீ.

'கல்ஹின்ன தமிழ்மன்றம்' என்ற நூல் வெளியீட்டகத்தின் ஸ்தாபகர் S.M. ஹனிபா அவர்களது வாழ்க்கை வரலாறு, மற்றும் அவரது நூல்கள் பற்றிய ஓர் ஆய்வு இங்கு இலக்கிய நயத்துடன் சொல்லப்படுகின்றது. நுழைவாயில், குன்றின் மேல் ஒரு தீபம், இலக்கிய வானில் ஒரு புது நிலவு, விளையும் பயிரை, மௌனமாய்ப் பெய்யும் மழை, நீங்காத நினைவலைகள், சுருதி விலகாத ராகம், இலக்கியக் குயிலின் இலட்சியக் குரல், இதயத்தின் உதயம் ஆகிய தலைப்புகளின் கீழ் எஸ்.எம். ஹனிபா அவர்களின் வாழ்க்கை வரலாறு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2809)


என்னால் எழுதி வெளிவந்த ஐந்தாவது நூல் (அக்டோபர் 1987)
அடிவானத்து ஒளிர்வுகள் (நாவல்)

ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பில் இருந்து…

அடிவானத்து ஒளிர்வுகள். பீ.எம்.புன்னியாமீன். சென்னை 600094: Al Fassy Publications, 151, Angappa Naick Street, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1987. (சென்னை 600094: Hameedsons, 1, Abdullah Street, Choolaimedu).
xii, 210 பக்கம், விலை: இந்திய ரூபா 25. அளவு: 18 X 12.5 சமீ.

கிராம எழுச்சிக்கு வழிகாட்டும் வகையில், தனது சமூகசேவை அனுபவங்களைப் பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல் இது. ஒரு நாட்டின் இதயம் கிராமம் என்பதை துல்லியமாக, மலையகக் கிராமமொன்றின் பகைப்புலத்தில் நின்று நாவலாக்கியிருக்கிறார். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினையை மையப்படுத்திய ஆரம்பகால முன்னோடி நாவல்களில் ஒன்று இது. இலங்கை முஸ்லிம்களுக்கு தனி அரசியல்கட்சி தேவை என்ற கருத்தை இந்நாவல் எழுதப்பட்ட 1983இல் வலியுறுத்தியுள்ளமையும், மாகாண அலகுகளின் அறிமுகம் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவசியம் என்பதையும் நாவலில் எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1983ல் எழுதப்பட்ட இந்நாவல் 1987இல் நூலுருவாகியுள்ளது. (இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987இல் மாகாணசபை உருவாகியதும், இலங்கையில் முதலாவது முஸ்லிம் அரசியல்கட்சி 1988இல் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது). (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2659)



என்னால் எழுதி வெளிவந்த மூன்றாவது நூல் (1987)
இலக்கிய விருந்து (இலக்கியத் திறனாய்வு).

ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பில் இருந்து…

இலக்கிய விருந்து. பீ.எம். புன்னியாமீன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, 1987. (சென்னை: பசுங்கதிர் பதிப்பகம், 43, முத்துமாரி வீதி), 96 பக்கம். விலை: இந்திய ரூபா 6. அளவு: 18X12 சமீ.

கண்டி தமிழ் மன்றம் வெளியிட்ட 30 நூல்கள் பற்றிய இவ் விபரப்பட்டியலில், நூலின் பௌதிக விபரங்களும் நூலின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கக் குறிப்பும் தரப்பட்டுள்ளன. அடுத்து வெளிவரவிருந்த ஆறு நூல்கள் பற்றிய முன்னோடித் தகவல் குறிப்பும் உள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 003)


என்னால் எழுதி வெளியிடப்பட்ட முதலாவது நூல் (நவம்பர் 1979)
தேவைகள் (சிறுகதைத் தொகுதி)

ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பில் இருந்து…

தேவைகள்: சிறுகதைகள். தலவின்னையூர் புன்னியாமீன் (இயற்பெயர்: பீ.எம்.புன்னியாமீன்). கட்டுகஸ்தோட்டை: இஸ்லாமிய சேமநலச் சங்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1979.  (Katugastota: KIWS Press, Galagedera Road), viii, 72 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18X12.5 சமீ.

தனது 19 வயதை பூர்த்தியாக்குவதற்குள் படைப்பாளியாகிவிட்ட பீ.எம்.புன்னியாமீன் பிரசுரித்த முதலாவது நூல். தினகரன் மூலம் எழுத்துலகில் அறிமுகமான இவர், மலையகத்தின் பல்வேறு சமூக இயக்கங்களிலும் பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்தவர். தினகரனில் வெளியான 5 மினிக் கதைகளையும், ஏனைய ஒன்பது புதிய கதைகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. ஆண்-பெண் திருமணம் தொடர்பான எட்டு கதைகளும், மலையகத் தொழிலாளர் பிரச்சினைகளையும், சமூகப் பிறழ்வுகளையும் கருவாகக் கொண்ட 6 கதைகளுமாக மொத்தம் 14 கதைகளும் விறுவிறுப்பானவையாக அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2629)



என்னால் எழுதி வெளிவந்த இரண்டாவது நூல் (மார்ச் 1986)
நிழலின் அருமை (சிறுகதைத் தொகுதி)

ஈழத்து தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான என்.செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பில் இருந்து…

நிழலின் அருமை. புன்னியாமீன். கண்டி: தமிழ் ம...ன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, மார்ச் 1986. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18 மத்திய வீதி), 76 பக்கம், விலை: ரூபா 15, அளவு: 18X12.5 சமீ.

இலங்கை, இந்திய வெகுசன தொடர்பு சாதனங்களில் வெளியான ஒன்பது சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. தான் வாழும் சமூகத்தைப் பற்றிய உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ள இக்கதை களில் எளியநடையும் நிதானமான போக்கும் இழையோடும் கதையமைப்பு காணப்படுகின்றது. 1981-85 காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளில் சிறந்த மூன்று சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டு, ருபாய் 5000 பணப் பரிசும், சான்றிதழும் பெற்றது. அகில இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கம், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் இத்தெரிவினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 1649)