எனது 11வது நூல் (ஜுன் 1990)
புதிய மொட்டுகள் (கவிதைத் தொகுப்பு)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…
புதிய மொட்டுகள். பீ.எம். புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்). உடத்தலவின்ன
20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுன் 1990.
(உடத்தலவின்னை: மவுண்ட் லைன் பதிப்பகம்). 100 பக்கம், விலை: ரூபா 20.,
அளவு: 18X12.5 சமீ.
உஸ்மான் மரிக்கார், நஜுமுதீன், மஸீதா புன்னியாமீன், தலவின்னை சிபார், அக்குறணை ரிழ்வான், ரிஷானா ரஷீட், கலைமகள் ஹிதாயா, கலதெனிய நளீம், தமீம் அன்சார் ஆகிய 9 இளம் கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. சிந்தனை வட்ட வெளியீடு. இளம்கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலினை புன்னியாமீன் தொகுத்துள்ளார். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2525)

என்னால் எழுதி வெளிவந்த 12வது நூல் (ஆகஸ்ட் 1990)
அரசறிவியல் மூலதத்துவங்கள் - பகுதி 1. (அரசறிவியல் நூல்)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…
அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 01). பீ.எம். புன்னியாமீன். கண்டி: EPI Tutorial College, 115, D.S. Senanayaka Rd, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1990. (அக்குறணை: நிலான் பிரின்டர்ஸ், 364 மாத்தளை வீதி). 96 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20.5X14 cm
க.பொ.த உயர்தர அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடத்தில் பகுதி 01 பாடப்பரப்பைத் தழுவியதான குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாகக் கற்கக் கூடிய இலகு நடையில் இக்குறிப்புகள் காணப்படுகின்றன. அத்துடன் பகுதி 01 இல் இடம்பெறக்கூடிய பரீட்சை மாதிரி வினாப்பத்திரம் விடைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4180)
என்னால் எழுதி வெளிவந்த 13வது நூல் (செப்டெம்பர் 1990)
அரசறிவியல் மூலதத்துவங்கள் - பகுதி 02. (அரசறிவியல் நூல்)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…
அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 02). பீ.எம். புன்னியாமீன். கண்டி: EPI Tutorial College, 115, D.S. Senanayaka Rd, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (அக்குறணை: நிலான் பிரின்டர்ஸ், 364 மாத்தளை வீதி). 96 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20.5x14 சமீ.
க.பொ.த உயர்தர அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடத்தில் பகுதி 02 பாடப்பரப்பைத் தழுவியதாக குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாகக் கற்கக் கூடிய இலகு நடையில் இக்குறிப்புகள் காணப்படுகின்றன. அத்துடன் பகுதி 02 இல் இடம்பெறக்கூடிய பரீட்சை மாதிரி வினாப்பத்திரம் விடைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4181)
எனது 14 வது நூல் (நவம்பர் 1990)
அரும்புகள் (கவிதைத் தொகுப்பு)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…
அரும்புகள், பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (உடத்தலவின்னை: மவுண்ட்லைன் பதிப்பகம்).
126 பக்கம், விலை: இந்திய ரூபா 15., இலங்கையில் ரூபா 30., அளவு: 21 X 13.5 சமீ.
இது சிந்தனை வட்டத்தின் ஏழாவது வெளியீடு. கலைமகள் ஹிதாயா, மரீனா இல்யாஸ், என்.நவரட்ணம், சுமைரா அன்வர், கலைநிலா சாதிகீன், இரா.திருச்செல்வம், தலவின்னை பூதொர, நாகபூஷணி கருப்பையா, கெக்கிறாவை ஸஹானா, இஸ்லாமியச் செல்வி, சீ.வி. நித்தியானந்தன் ஆகிய பதினொரு இளம் கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இளம்கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலினை புன்னியாமீன் தொகுத்துள்ளார். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2468)
என்னால் எழுதி வெளிவந்த 15வது நூல் ((ஜனவரி 1991)
அரசறிவியல் தொகுதி 3: இலங்கை உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (அரசறிவியல் நூல்)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…
அரசறிவியல் தொகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 6வது பதிப்பு, பெப்ரவரி 1997, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு 12: ஐக்கோ லிமிட்டெட், 218/5, மெசெஞ்சர் வீதி).
64 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X14 சமீ.
புன்னியாமீன் மூலம் எழுதி வெளியிடப்பட்ட G.A.Q, G.C.E.(A/L) புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்தொடரில் 4வது நூல். உள்ளுராட்சி முறையும், கட்சி முறையும், வெளிநாட்டுக் கொள்கைகளும் சம்பந்தமான மாதிரி வினாக்களையும் சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது. உள்@ராட்சி முறை, மாகாணசபை, கட்சிமுறை, ஐக்கிய நாடுகள் சபை, சார்க் அமைப்பு, அணிசேரா இயக்கம் ஆகிய அம்சங்கள் விளக்கப்படுத்தப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2184)