Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (31 முதல் 35 வரை)

 என்னால் எழுதி வெளிவந்த 31வது நூல் (மே 1995)

இலங்கையின் அரசியல்; 95: நிகழ்கால நிகழ்வுகள். (அரசியல் ஆய்வு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

இலங்கையின் அரசியல் 95: நிகழ்கால நிகழ்வுகள். பீ.எம்.புன்னியாமீன், உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,
1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 10: M.B.Printers, L/G/S/04 Sri Sangaraja Mawathe)
80 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X13.5 சமீ.

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் “தேசியக் கொள்கை” என்ற எண்ணக்கரு இன்றியமையாதது. தேசத்தின் பொருளாதாரம், கல்வி, சமூகவியல், ஆகிய துறைகளில் தேசியக் கொள்கைகள் காணப்படின் அரசாங்க மாற்றங்களால் இவ்வடிப்படைக் கொள்கைகள் மாறப்போவதில்லை. இதனால் நாட்டின் சீரான அபிவிருத்தியினை நாம் அவதானிக்கமுடியும். மாறாக, அரசாங்கம் மாற, மாற குறித்த துறைசார்ந்த கொள்கைகளைத் தேசியக் கொள்கைகளாகவன்றி கட்சிக் கொள்கைகளாக மாற்றிவருவது பலவிதமான சிக்கல்களை நாட்டில் உருவாக்கலாம். இத்தன்மைகளைப் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் காணமுடியும். 1994ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. 1995ம் ஆண்டில் இலங்கையில் பொருளாதார, கல்வி, சமூகவியல், வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. காலத்தின் தேவையுணர்ந்து எழுதப்பட்ட நூல் இதுவாகும். G.C.E.(A/L), G.A.Q., B.A. வகுப்புகளுக்கேற்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2197)


 என்னால் எழுதி வெளிவந்த 32வது நூல் (ஏப்ரல் 1996)

வில்ஸ் வேர்ல்ட் கப் 1996: நினைவுகள். (விளையாட்டு நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

வில்ஸ் வேர்ல்ட் கப் 1996: நினைவுகள். பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (கொழும்பு 13: விஜயா கிரபிக்ஸ், 176/12, ஜம்பட்டா வீதி). 84 பக்கம், புள்ளி விபரங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 65.00, அளவு: 21X14 சமீ.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாகத் தமிழில் வெளி வந்த முதல் நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூல், 1996ம் ஆண்டில் வில்ஸ் உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இணைந்து நடத்தப்பட்டன. இந்தப் போட்டித் தொடரில் 6வது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டித் தொடர் பற்றிய சகல விபரங்களும்ää முக்கிய நிகழ்வுகளும் புள்ளிவிபரத் தகவல்களுடன் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. 1975, 79. 83ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடைபெற்ற புருடன்ஷியல் கிண்ணத்துக்கான 1வது 2வது, 3வது உலகக் கோப்பைக்கான விபரங்களும், 1987ம் ஆண்டில் இந்தியா-பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற ரிலயன்ஸ் கிண்ணத்துக்கான 4வது உலகக் கோப்பைக்கான விபரங்களும், 1992ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பென்சன் அன்-ஹெஜஸ் கிண்ணத்துக்கான 5வது உலகக் கோப்பைக்கான விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2388)



எனது 33 வது நூல் (ஜுலை 1996)

பாலங்கள்: கவிதை நூல்

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

பாலங்கள்: கவிதைத்தொகுதி. பீ.எம்.புன்னியாமீன். (தொகுப்பாசிரியர்). உடத்தலவின்னை (இலங்கை), சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 1996. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிராப்)
70 பக்கம். விலை: ரூபா 18. அளவு: 17.5X12 சமீ.

ஈழத்து இளம்கவிஞர்கள் ஐவரின் கவிதைத்தொகுதி. பஹிமா ஜஹான், மரினா இல்யாஸ், உஸ்மான் மரிக்கார், ஜெயந்தன், சுமைரா அன்வர் ஆகிய ஐவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இளம்கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலினை புன்னியாமீன் தொகுத்துள்ளார். இது சிந்தனைவட்டத்தின் 59வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 445)


 என்னால் எழுதி வெளிவந்த 34வது நூல் (ஜுலை 1996)

யாரோ எவரோ எம்மை ஆள.. (சிறுகதைத் தொகுதி)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

யாரோ எவரோ எம்மை ஆள..பீ.எம்.புன்னியாமீன், சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது தெரு, குமரன் காலனி, வட பழநி, 1வது பதிப்பு, ஜுலை 1996. (Madras 14: Chitra Printography)
120 பக்கம், விலை: இந்திய ரூபா 24., அளவு: 18X12 சமீ.

இத்தொகுப்பிலுள்ள 8 கதைகளும், எண்பதுகளில் இருந்து தொன்னூறு வரையுள்ள ஒரு தசாப்த காலப்பகுதியைச் சார்ந்தவை. எனவே இக்கதைகளில் இக்காலப்பகுதிக்கேயுரிய சமூக, அரசியல் பிரச்சினைகளைக் காணமுடிகின்றது. புன்னியாமீனின் எழுத்துகளில் எளிமையும் தெளிவும் சமூகப்பார்வையும் மிகுந்திருப்பதைக் காணலாம். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை இலக்கிய வடிவமாக முன்வைப்பதில் இவர் பணி மகத்தானது. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள திருப்பங்கள், தயவுசெய்து என்னை மறந்துவிடு, உணர்வுகள், யாரோ எவரோ எம்மை ஆள, காட்டாறு வெள்ளத்தில்.., விளைவுகள் உடன் தெரிவதில்லை, பார்வையுள்ள குருடர்கள், அஸ்தமனம் உதயத்திறகாக ஆகிய எட்டுக் கதைகளும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினையை மையமாகக் கொண்டவை என்பது சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 1684)


எனது 35வது நூல் (பெப்ரவரி 1997)

(என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய முதல் நூல்)

அறிமுகத் தமிழ். (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுகத் தமிழ். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன மடிகே: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 1997. ((Colombo 12: AICO (pvt) Ltd, 218/5, Messenger Street).
48 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் வரிசை 1. ஆண்டு 4,5 புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்கள், தமிழ்ச் சொற்கள், தமிழ் இலக்கணம், பால், எண், இடம், காலம், வாக்கிய உறுப்புக்கள், புணர்தல், தொகுதிச் சொற்கள், இரட்டைக்கிளவி, இணைமொழிகள், பலமொழிகளும் அவை வெளிப்படுத்தும் கருத்துக்களும், ஒத்த கருத்துச் சொற்கள், சொற்றொடர்களுக்குரிய தனிச்சொற்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2287)