Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (36 முதல் 40 வரை)

எனது 36வது நூல் (ஏப்ரல் 1997)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 2வது நூல்

ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டததில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 1. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (Colombo 12: Aico (Pvt) Ltd, 218/5 Messenger Street)
iv + 98 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 28X21.5 சமீ.

இலங்கையில் மாணவர்கள் எதிர்நோக்கும் முதலாவது அரசாங்கப் பரீட்சை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையாகும். மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5ல் நடத்தப்படும் இப்பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாகும். புலமைப்பரிசில் பரீட்சைக் குத் தோற்றும் மாணவர்களுக்கான இந்நூலில் பகுதி 1, பகுதி 2க் கான 24 மாதிரி வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல் சிந்தனைவட்டத்தின் 66வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3002)


எனது 37வது நூல் (ஏப்ரல் 1997)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 3 வது நூல்

ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டததில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. ((Colombo 12: Aico (Pvt) Ltd, 218/5 Messenger Street)
113 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 28X21.5 சமீ.

ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை வழி காட்டி நூல். இவ்விரண்டாம் தொகுதியில் மாதிரி வினாப்பத்திரங்கள் 25 முதல் 44 வரை இடம்பெற்றுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் இப்புத்தகம் சிந்தனைவட்டத்தின் 67 வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3003)



எனது 38வது நூல் (மே 1997)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 4 வது நூல்

அறிமுகக் கணிதம் (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருநது…

அறிமுகக் கணிதம். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மே 1997. (கொழும்பு 12: ஐக்கோ லிமிட்டெட், 218/5, மெசெஞ்சர் வீதி).
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் இலக்கம் 2. ஆண்டு 4, 5 புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. இந்நூலில் எண்களை அறிதல், எண்களை ஏறு இறங்கு வரிசைப்படுத்தல், எண்கோலங்கள், சதுர எண்கள், முக்கோண எண்கள், கணிதச் செய்கைகள், பின்னங்கள், அளத்தல் முறைகள், தள உருவங்கள், வரைபுகள், திசைகள், கணிதப் புதிர்கள் ஆகியன தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நோக்கிய பாட அலகுகளாக விளக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2344)



எனது 39வது நூல் (ஜுன் 1997)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 5 வது நூல்

அறிமுக சுற்றாடல் கல்வியும் பொது அறிவும். (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக சுற்றாடல் கல்வியும் பொது அறிவும். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுன் 1997. (Colombo 12: AICO Ltd., 218/5, Messenger Street)

80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ. புன்னியாமீன்-மஸீதா தம்பதியினர் இணைந்து வெளியிட்டுள்ள புலமைப்பரிசில் தரம் 5 பாடவழிகாட்டி நூல் இது. பாடப்பரப்பில் இடம் பெறும் அறிமுக சுற்றாடல் கல்வியும், பொது அறிவு விடயங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆரம்ப வகுப்பு மாணவர்கள் இலகுவாகவும், சுயமாகவும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இது சிந்தனை வட்டத்தின் 69வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2337)

எனது 40வது நூல் (ஜுன் 1997)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 6 வது நூல்

அறிமுக விஞ்ஞானமும் ஆங்கிலமும். (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக விஞ்ஞானமும் ஆங்கிலமும். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுன் 1997. (Colombo 12: AICO Ltd., 218/5, Messenger Street)
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடவழிகாட்டி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. அறிமுக விஞ்ஞானம் பற்றியும், ஆங்கிலம் பற்றியும் பாடப் பரப்பில் இடம்பெறும் குறிப்புக்களை எளிய நடைமுறையில் விளக்குகின்றது. புலமைப் பரிசில் பரீட்சையில் விஞ்ஞானம், ஆங்கிலம் தனி வினாப்பத்திரங் களாக இடம்பெறாவிடினும் கூட பகுதி 1, பகுதி 2 வினாப்பத்திரங்களில் இவை இணைக்கப்படும். அதற்கேற்ற வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2340)