Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (26 முதல் 30 வரை)

 என்னால் எழுதி வெளிவந்த 26வது நூல் (அக்டோபர் 1993)

வரலாறும் சமூகக் கல்வியும்.

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

வரலாறும் சமூகக் கல்வியும் - 1. பீ.எம். புன்னியாமீன். கண்டி: EPI Tutorial College, 115 D.S.S. Street, 1வது பதிப்பு, அக்டோபர் 1993. (கண்டி: சிட்னி அச்சகம், 87/1 டீ.எஸ். சேனாநாயக்க வீதி)
vii, 88 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 30., அளவு: 29x21 சமீ.

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைய ஆண்டு 10, 11 மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட நூல் இதுவாகும். இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சியில் பல்வேறு அரசியல் யாப்புக்களும் ஆராயப்பட்டுள்ளன. குடியரசு, சர்வாதிகாரம் போன்றவை பற்றிய விளக்கங்களும், ஐக்கிய நாடுகள் சபை, சார்க், அணிசேரா இயக்கம், ஆசியான், அரபு நாடுகளின் சம்மேளனம், ஆபிரிக்க ஒற்றுமை நிறுவனம் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பற்றிய குறிப்புக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகக் கல்வி குறிப்புகள் (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2909)



என்னால் எழுதி வெளிவந்த 27வது நூல் (நவம்பர் 1993)
 
வரலாறும் சமூகக் கல்வியும் - 2

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

வரலாறும் சமூகக் கல்வியும் - 2. பீ.எம். புன்னியாமீன்.. கண்டி: EPI Tutorial College, 115 D.S.S. Street, 1வது பதிப்பு, நவம்பர் 1993. (உடத்தலவின்ன: மவுண்ட்லைன் பதிப்பகம்)
80 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 25., அளவு: 29X21 சமீ.

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைய ஆண்டு 10, 11 மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட நூல் இதுவாகும். மத்தியகால ஐரோப்பா, மனித செயற்பாடுகளும் உலகின் பல்வேறு பிரதேசங்களும். 1வது 2வது உலகமகா யுத்தங்கள் என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. இத் தலைப்புக்களுக்குள் அடங்கும் கடந்தகால வினாக்களும் விடைகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2910)



என்னால் எழுதி வெளிவந்த 28வது நூல் (ஓகஸ்ட் 1994)

இலங்கையில் தேர்தல்கள்: அன்றும் இன்றும். (அரசியல் ஆய்வு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

இலங்கையில் தேர்தல்கள்: அன்றும் இன்றும். பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13: ஈ.பீ.ஐ.புத்தகாலயம், 64,2/2, ஹின்னி அப்புஹாமி மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (கொழும்பு 10: ஜீவாதாஸ், ஏ 225/33, மாளிகாவத்தை தொடர்மாடி).

68 பக்கம், வரைபடங்கள், புள்ளிவிபரம், விலை: ரூபா 50., அளவு: 21X13.5 சமீ.

இலங்கை அரசியல் வரலாற்றில் சட்டநிரூபண சபைக்கு பிரதிநிதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதலாவது தேர்தல் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் இருந்து 1994ம் ஆண்டில் தென் மாகாணசபை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இடைக்கால மாகாணசபைத் தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற சகல தேர்தல்களும், அவற்றின் போக்குகளும், தேர்தல் முடிவுகளும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. புன்னியாமீனால் எழுதப்பட்டு ஈ.பீ.ஐ.புத்தகாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் இலங்கையின் தேர்தல் வரலாற்றினைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்மிக்க கையேடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3193)



என்னால் எழுதி வெளிவந்த 29வது நூல் (நவம்பர் 1994)

1994 பொதுத் தேர்தலும் சிறுபான்மை இனங்களும். (அரசியல் ஆய்வு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

1994 பொதுத் தேர்தலும் சிறுபான்மை இனங்களும். பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, Hinni Appuhamy Mawathe, 2வது பதிப்பு, ஜனவரி 1995, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 10: Jeevathas, A225/33, Maligawathe Flats).
84 பக்கம், அட்டவணைகள், சித்திரங்கள், விலை: ரூபா 55., அளவு: 21.5X14 சமீ.

இலங்கை அரசியலில் 10வது பொதுத்தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அது ஏற்படுத்தக் கூடிய சமகால அரசியல் மாற்றங்களை எதிர்வுகூறும் அரசியல் திறனாய்வுகள். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் விளக்கமாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 10வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை அமைக்கக் கூடிய அதிகாரத்தினை சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவே வழங்கப்பட்டது. எனவே, 1994ம் ஆண்டு பதவியேற்ற அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2188)



என்னால் எழுதி வெளிவந்த 30வது நூல் (நவம்பர் 1994)


1994 சனாதிபதித் தேர்தலும், சிறுபான்மை இனங்களும். 
(அரசியல் ஆய்வு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து...

1994 சனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை இனங்களும். பீ.எம். புன்னியாமீன். கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, Hinni Appuhamy Mawathe, 2வது பதிப்பு, ஜனவரி 1995, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 10: Jeevathas, A225/33, Maligawathe Flats).

92 பக்கம், அட்டவணைகள், சித்திரங்கள், விலை: ரூபா 70., அளவு: 21X14 சமீ.

அரசறிவியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கும், அரசியலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்ற நூல். இலங்கையில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று ஜனாதிபதி தேர்தல்களினதும் வாக்கு விபரம் மாகாண, மாவட்ட, தொகுதி அடிப்படையில் தரப்பட்டுள்ளன. 1994ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டுவதற்கு சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் விசாலமான பங்களிப்பினை வழங்கியது. எனவே சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை சனாதிபதி எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்று ஆராயப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2187)

 

18 வருடங்களுக்கு முன்பு என்னால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ஒன்று…