Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (21 முதல் 25 வரை)

என்னால் எழுதி வெளிவந்த 21வது நூல் (நவம்பர் 1991)

வரலாறு: ஆண்டு 10. (வரலாறு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…


வரலாறு: ஆண்டு 10. பீ.எம்.புன்னியாமீன், உடத்தலவின்ன மடிகே: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 8வது பதிப்பு, பெப்ரவரி 1998, 1வது பதிப்பு, நவம்பர் 1991. (கொழும்பு 13: டிஜிட்டல் பிரின்ட், 601/61, கே. சிறில் சீ. பெரேரா மாவத்தை)
72 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை வழிகாட்டியாகும். புதிய பாடத்திட்டத்தின் ஆண்டு 10 பாடப்பரப்பில் சேர்க்கப்பட்ட புதிய விடயங்களுக்கு அமைய எளிய நடையில் சரளமாக, சின்னச்சின்ன கேள்வி பதில்களாகää சிறுசிறு குறிப்புகளாக விளக்கப்பட்டுள்ளது. வரலாறு (ஆண்டு – 10) வினா - விடைத் தொகுதி (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2907)

 என்னால் எழுதி வெளிவந்த 22வது நூல் (ஜனவரி 1992)

அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். 
(அரசறிவியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 7வது பதிப்பு, பெப்ரவரி 1997, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (கொழும்பு 13: விஜய கிரபிக்ஸ், 176/12, ஜம்பட்டா வீதி).
84 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21X14 சமீ.

G.A.Q, G.C.E.(A/L) புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல் தொடரில் 1வது நூல். அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும் தொடர்பான மாதிரி வினாக்களையும் சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது. அரசாங்க வினாப்பத்திரங்களிலும், பல்கலைக் கழக வினாப்பத்திரங்களிலும் இடம்பெறக் கூடிய வினாக்களை பிரதான 20 தலைப்புகளில் தொகுத்து 63 உப தலைப்புகளின் கீழ் விடை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2182)



 என்னால் எழுதி வெளிவந்த 23வது நூல் (நவம்பர் 1992)


அரசறிவியல் கோட்பாடுகள். (அரசறிவியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அரசறிவியல் கோட்பாடுகள். பீ.எம். புன்னியாமீன்,  உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (அக்குறணை: நிலான் பிரின்டர்ஸ், 364, மாத்தளை வீதி).
120 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5X14 சமீ.

க.பொ.த உயர்தர அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடம் பகுதி 1 இல் இடம்பெறக்கூடிய அரசியல் கோட்பாடுகள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாகக் கற்கக் கூடிய இலகு நடையில் இக்குறிப்புகள் காணப்படுகின்றன. இப்புத்த கத்தில் காணப்படக் கூடிய குறிப்புகள் பேராதனைப் பல்கலைக்கழக முதற் கலைத் தேர்வு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் உள்ளன. இந்நூல் சிந்தனைவட்டத்தின் 23 வது வெளியீடாக வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4179)


என்னால் எழுதி வெளிவந்த 24வது நூல் (மே 1993)

அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி 
(அரசறிவியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்த...

அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 7வது பதிப்பு, ஜனவரி 1998, 1வது பதிப்பு, மே 1993. (கொழும்பு 13: விஜய கிரபிக்ஸ், 176/12, ஜம்பட்டா வீதி).
72 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X14 சமீ.

இந்நூல் புன்னியாமீன் மூலமாக எழுதி வெளியிடப்பட்ட G.A.Q, G.C.E. (A/L) புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்தொடரில் 3வது நூல். இலங்கையில் அரசியல் திட்ட வளர்ச்சி தொடர்பான மாதிரி வினாக்களையும் சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது. அரசாங்க வினாப்பத்திரங்களிலும், பல்கலைக்கழக வினாப்பத்திரங்களிலும் இடம்பெறக் கூடிய வினாக்களை பிரதான 17 தலைப்புகளில் தொகுத்து 54 உப தலைப்புகளின் கீழ் விடை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1931ம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பு முதல் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு வரையிலான முக்கிய அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளமையினால் அரசறிவியலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும் இந்நூல் பொருத்தமானதாக அமையு மெனக் கருதலாம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2183)



என்னால் எழுதி வெளிவந்த 25வது நூல் (ஜூன் 1993)

தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (அரசறிவியல் நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 6வது பதிப்பு, ஒக்டோபர் 1997, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 13: டிஜிட்டல் பிரின்ட், 601/61, K.Ciril C Perera Mawathe).
88 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 80., அளவு: 21X14 சமீ.

G.C.E.(A/L), G.A.Q., வகுப்புகளுக்கேற்றது. மாதிரி வினாக்களையும், சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது. G.C.E.(A/L), G.A.Q., மட்டத்தினருக்கான பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுக ளையும், G.C.E.(A/L) மாணவர்களுக்கான இந்தியா, முன்னைய சோவியத் யூனியன் ஆகிய பாட அலகுகளையும் உள்ளடக்கியுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2209)