Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (16 முதல் 20 வரை)

என்னால் எழுதி வெளிவந்த 16வது நூல் (அக்டோபர் 1991)
வரலாறு: ஆண்டு 11. (வரலாறு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

வரலாறு: ஆண்டு 11. பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்ன...... மடிகே: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 8வது பதிப்பு, ஜனவரி 1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (கொழும்பு 13: டிஜிட்டல் பிரின்ட், 601/61, கே.சிறில் சீ.பெரேரா மாவத்தை)
76 பக்கம், புகைப்படங்கள், நிலவரை படங்கள், விலை: ரூபா 70., அளவு: 21X13.5 சமீ.

இது கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை வழிகாட்டியாகும். புதிய பாடத்திட்டத்தின் ஆண்டு 11 பாடப்பரப்பில் சேர்க்கப்பட்ட புதிய விடயங்களுக்கு அமைய எளிய நடையில் சரளமாக, குறுகிய கேள்வி பதில்களாக, சிறு குறிப்புகளாக விளக்கப்பட்டுள்ளது. வரலாறு (ஆண்டு – 11) வினா-விடைத் தொகுதி (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2908)


   
என்னால் எழுதி வெளிவந்த 17வது நூல் (அக்டோபர் 1991)
  
வரலாறு - குறிப்புகள் (ஆண்டு – 9).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 9). பீ.எம். புன்னியாமீன். கண்டி:EPI Tutorial College, 115, D.S. Senanayaka Road, 1வது பதிப்பு, அக்டோபர் 1991. (அக்குறணை: நிலான் பிரின்டர்ஸ், 364 மாத்தளை வீதி).
x + 48 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 29X19 சமீ.

புதிய பாடதிட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யபப்பட்ட ஆண்டு – 9 மாணவர்களுக்கான 'வரலாறு' பாடத்தில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புக்களைக் கொண்டதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள் போன்றவற்றைச் சேர்த்திருப்பது மாணவர்களுக்கு மேலதிக விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2803)


என்னால் எழுதி வெளிவந்த 18வது நூல் (அக்டோபர் 1991)

வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 10).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 10). பீ.எம்.... புன்னியாமீன். கண்டி: EPI Tutorial College, 115 115 D.S. Senanayaka Rd, 1வது பதிப்பு, அக்டோபர் 1991. (அக்குறணை: நிலான் பிரின்டர்ஸ், 364 மாத்தளை வீதி).
60 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 70., அளவு 29X19 சமீ.

புதிய பாடதிட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யபப்பட்ட ஆண்டு – 10 மாணவர்களுக்கான 'வரலாறு' பாடத்தில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புக்களைக் கொண்டதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள் போன்றவற்றைச் சேர்த்திருப்பது மாணவர்களுக்கு மேலதிக விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2804)


என்னால் எழுதி வெளிவந்த 19வது நூல் (அக்டோபர் 1991)
வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 11).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 11). பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை: 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, அக்டோபர் 1991, (அக்குறணை, சிட்டி அச்சகம், 6வது மைல்கல்).
72 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 29X19 சமீ.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யபப்பட்ட ஆண்டு 11 மாணவர்களுக்கான 'வரலாறு' பாடத்தில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக்குறிப்புக்களைக் கொண்டதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள் போன்றவற்றைச் சேர்த்திருப்பது மாணவர்களுக்கு மேலதிக விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அத்துடன், க.பொ.த சாதாரண தர அரசாங்கப் பரீட்சையை மையமாகக் கொண்டு மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இது சிந்தனைவட்டத்தின் 14வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2805)

என்னால் எழுதி வெளிவந்த 20 வது நூல் (நவம்பர் 1991)
வரலாறு: ஆண்டு 9. (வரலாறு)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

வரலாறு: ஆண்டு 9. பீ.எம்.புன்னியாமீன், உடத்தலவின்ன மடிகே: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 6வது பதிப்பு, ஜனவரி 1999, 1வது பதிப்பு, நவம்பர் 1991. (கொழும்பு 13: டிஜிட்டல் பிரின்ட், 601/61, கே.சிறில் சீ.பெரேரா மாவத்தை)
64 பக்கம், விலை: ரூபா 47.50, அளவு: 21X14 சமீ.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை வழிகாட்டியாகும் இந்நூலில் இலங்கையின் நீர்வள நாகரிகம், தரைத் தோற்றம், காலநிலை, நீர்வழங்கல், நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி, நீர்வள நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் உட்பட பத்துத் தலைப்புகளில் வரலாற்று விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. எளிய நடையில் சரளமாக, சின்னச்சின்ன கேள்வி பதில்களாக, சிறுசிறு குறிப்புகளாக அட்டவணைகளாக வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. வரலாறு (ஆண்டு – 9) வினா - விடைத் தொகுதி (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2906)