Sinthanai Vattam Books

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (131 முதல் 135 வரை)


 எனது 131வது நூல் (செப்டம்பர் 2007)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 67வது நூல்


தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)


... ... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத் தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-07-8

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 269 வது வெளியீடாகும். (நூல்தேட்டம்



எனது 132வது நூல் (செப்டம்பர் 2007)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 68வது நூல்


தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-08-5

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஐந்து மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர் களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 270 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4296).



 எனது 133வது நூல் (செப்டம்பர் 2007)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 69வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே. 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+88 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-09-2

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 5வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் எட்டு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் எட்டு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 271வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4297).



 எனது 134வது நூல் (செப்டம்பர் 2007)

என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 70வது நூல்


தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+72 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-10-8

2004, 2005 ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 6வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஆறு மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஆறு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 272 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4298).



எனது 135வது நூல் (செப்டெம்பர் 2007)

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09


ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

... இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09, புன்னியாமீன். உடத்தலவின்னை. 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
XXX+ 87 பக்கம், விலை: ரூபா 200, அளவு 20.5X14.5 சமீ., ISBN-13 : 978-955-8913-67-3

'இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 9வது தொகுதி' (புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் 2) ஆக சிந்தனைவட்டம் வெளியிட்டுள்ள 275ஆவது  நூல் இதுவாகும். புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு இரண்டாம் பாகமாக இது வெளிவந்துள்ளது. ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடா, நோர்வே, பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 15 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வள்ளிநாயகி இராமலிங்கம் (கனடா), பொன்னரசி கோபாலரட்ணம் (நோர்வே), பத்மன் பசுபதிராஜா (ஜேர்மனி), இணுவை சக்திதாசன் (டென்மார்க்), ஆ.மகேந்திரராஜா (ஜேர்மனி), வைத்தீஸ்வரன் ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்), முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் (பிரான்ஸ்), தர்மலிங்கம் ரவீந்திரன் (ஜேர்மனி), செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்), எம்.என்.எம்.அனஸ் (ஐக்கிய இராச்சியம்), மட்டுவில் ஞானக்குமாரன் (ஜேர்மனி), சகாதேவன் இராஜ்தேவன் (நோர்வே), மனோன்மணி பரராஜசிங்கம் (ஜேர்மனி), சீ.பன்னீர்செல்வம் (இந்தியா), இராஜேஸ்வரி சிவராஜா (ஜேர்மனி) ஆகிய 15 பிரமுகர்களின் பணிகள் கட்டுரையுருவில் தரப்பட்டுள்ளன. இவை (பதிவு இலக்கம் 226-240) இலங்கையில் வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் பிசுரமானவையாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 5833).