சிந்தனை வட்டம்
நாளைய சந்ததியின் இன்றைய சக்தி
இலங்கையில் நிகழ்ந்த நிறைவானதோர் தமிழ் நூல் வெளியீட்டு விழா: என். செல்வராஜா
கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா’ என்ற இந்நூல் வெளியீட்டுவிழா கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் 2013 பெப்ரவரி 25ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொறுத்தவரையில் ஒரு கூரையின்கீழ் நூறு பேரைத் திரட்டுவது என்பது பெரிய காரியம். ஆயின் இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் 550 பேருக்கும் மேல் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகும். கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் 400 ஆசங்களே உள்ளன. வெளியில் இருந்து 150 கதிரைகள் வாடகைக்குப் பெறப்பட்டு பிரதான மண்டபத்துடன் இணைந்த மண்டபத்திலும் போடப்பட்டதாகப் புன்னியாமீன் எனக்குத் தெரிவித்திருந்தார். மண்டபத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையிலும் நிகழ்வுகள் பெருப்பித்தும் காட்டப்பட்டன. விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா– சுவடுகள் எனும் 48 பக்க நூல் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி நிரலுடன் சிந்தனை வட்டத்தினதும் அதன் தாபகர் புன்னியாமீனினதும் பணிகளை சுவடுகள் உள்ளடக்கியிருந்தது. பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று நூல் பெறுவோர் பட்டியல் நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காணமுடியவில்லை. இருப்பினும் விழா நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் நூலின் அச்சிடப்பட்ட பிரதிகளின் அரைவாசிக்கும் மேல் அன்றைய விழாவிலேயே விற்பனையானதும் ஈழத்து வெளியீட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க ஒன்று.
கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. பேராசிரியர்களும் கல்விமான்களுமே அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.
மனோதத்துவ நிபுணரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராவார். சுமார் நான்கு தசாப்த காலமாக இலங்கையில் இன மத பேதம் பாராது சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். சுனாமி அனர்த்தத்தின் பின்பும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்பும் வடமாகாணத்திலும் இவர் கணிசமான சேவையாற்றியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் புன்னியாமீன் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் பொதுவாக உளவியல் பற்றியும் விரிவாகவும் சுவையாகவும் அனுபவ வெளிப்பாட்டுடன் எழுதியுள்ளார். இவ்விழாவிற்கு அதிகளவில் பார்வையாளர் கலந்து கொண்டமைக்கு இன மத வேற்றுமையற்ற தன்னலம் பாராத யூ.எல்.எம்.நௌபர் அவர்களது சேவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த விழாவின் போது நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வாழ்த்தினார். உலகிலேயே அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக 1998 கின்னஸ் சாதனைவரிசை நூலில் இடம்பெற்றிருந்த முக்கியத்துவமான குர்ஆன் பிரதியொன்றை தேடிப்பெற்று அன்பளிப்பாக வழங்கியும் அவரை மகிழ்வித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் -இருமொழி வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பெற்றார். தொழிலதிபரும் பரோபகாரியுமான ஏ.ஆர்.எஸ். அரூஸ் ஹாஜி, தொழிலதிபரும் பரோபகாரியுமான அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் – சேவைச்செம்மல்கள் என்று பட்டம் வழங்கப்பட்டனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் – இதழியல் வித்தகர் என்ற பட்டத்தையும், உளவியல்துறை விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல்கள் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டனர்.
‘ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா’ நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.
என். செல்வராஜா
நூலகவியலாளர்.
http://thesamnet.co.uk/?p=44322
என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (131 முதல் 135 வரை)
எனது 131வது நூல் (செப்டம்பர் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 67வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 67வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)
... ... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத் தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-07-8
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 269 வது வெளியீடாகும். (நூல்தேட்டம்
எனது 132வது நூல் (செப்டம்பர் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 68வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 68வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-08-5
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஐந்து மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர் களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 270 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4296).
எனது 133வது நூல் (செப்டம்பர் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 69வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 69வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே. 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+88 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-09-2
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 5வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் எட்டு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் எட்டு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 271வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4297).
எனது 134வது நூல் (செப்டம்பர் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 70வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 70வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+72 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-10-8
2004, 2005 ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 6வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஆறு மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஆறு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 272 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4298).
எனது 135வது நூல் (செப்டெம்பர் 2007)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
... இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09, புன்னியாமீன். உடத்தலவின்னை. 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
XXX+ 87 பக்கம், விலை: ரூபா 200, அளவு 20.5X14.5 சமீ., ISBN-13 : 978-955-8913-67-3
'இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 9வது தொகுதி' (புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் 2) ஆக சிந்தனைவட்டம் வெளியிட்டுள்ள 275ஆவது நூல் இதுவாகும். புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு இரண்டாம் பாகமாக இது வெளிவந்துள்ளது. ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடா, நோர்வே, பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 15 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வள்ளிநாயகி இராமலிங்கம் (கனடா), பொன்னரசி கோபாலரட்ணம் (நோர்வே), பத்மன் பசுபதிராஜா (ஜேர்மனி), இணுவை சக்திதாசன் (டென்மார்க்), ஆ.மகேந்திரராஜா (ஜேர்மனி), வைத்தீஸ்வரன் ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்), முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் (பிரான்ஸ்), தர்மலிங்கம் ரவீந்திரன் (ஜேர்மனி), செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்), எம்.என்.எம்.அனஸ் (ஐக்கிய இராச்சியம்), மட்டுவில் ஞானக்குமாரன் (ஜேர்மனி), சகாதேவன் இராஜ்தேவன் (நோர்வே), மனோன்மணி பரராஜசிங்கம் (ஜேர்மனி), சீ.பன்னீர்செல்வம் (இந்தியா), இராஜேஸ்வரி சிவராஜா (ஜேர்மனி) ஆகிய 15 பிரமுகர்களின் பணிகள் கட்டுரையுருவில் தரப்பட்டுள்ளன. இவை (பதிவு இலக்கம் 226-240) இலங்கையில் வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் பிசுரமானவையாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 5833).
என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (126 முதல் 130 வரை)
எனது 126வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 63 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 3)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 63 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 3)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 03) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-03-0
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4301).
எனது 127வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 64 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 4)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 64 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 4)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 04) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-04-7
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 266வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4302).
எனது 128வது நூல் (செப்டம்பர் 2007)
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 08
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 08
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 8. பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
96 பக்கம், விலை: ரூபா 200., அளவு 21X14.5 சமீ., ISBN: 978-955-8913-66-6.
சிந்தனைவட்டத்தின் 246வது வெளியீடு. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 8ம் தொகுதி, இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம்-7 ஆக வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் 25 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரக்குறிப்புகள் 201 முதல் 225 வரையிலான பதிவுகளாக, இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களும், இவர்கள் துறைசார்ந்த சாதனைகளும் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4890).
எனது 129வது நூல் (செப்டம்பர் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 65 வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 65 வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+52 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-05-4
2004,2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 267 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4293).
எனது 130வது நூல் (செப்டம்பர் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 66வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 66வது நூல்
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-06-1
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 268வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4294).
என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (121 முதல் 125 வரை)
எனது 121வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 58 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 5)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 58 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 5)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 05) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 1 உடத்தலவின்னை மடிகே).
72 பக்கம்ää, விலை: ரூபா 90., அளவு 20X18 சமீ., ISBN -13 : 978-955-8913-91-8
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக் காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாட நெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஐந்தாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஏழு மாதிரிவினாத்தாள் களும், பகுதி 02 இல் ஏழு மாதிரிவினாத்தாளகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப் பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 260வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4316).
எனது 122வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 59 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 6)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 59 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 6)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 06) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
vi+46 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-8913-92-5
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஆறாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக் தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத்தாள் களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத் தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்திய எதிர்பார்க்கை வினாக்களாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 261வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4317).
எனது 123வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 60 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 7)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 60 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 7)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 07) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-8913-93-2
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்தபாடசாலை களுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஆறாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்திய எதிர்பார்க்கை வினாக்களாகும். புத்தக வடிவில் 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 262வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4318).
எனது 124வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 61 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 1)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 61 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 1)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 01) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+48 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-01-7
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால் மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 263வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4299).
எனது 125வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 62 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 2)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 62 வது நூல்
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 2)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 02) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-02-3
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 264வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4300).
என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (116 முதல் 120 வரை)
எனது 116வது நூல் (ஜுலை 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 53 வது நூல்
2007 புலமைச்சுடர் (தொகுதி 4)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 53 வது நூல்
2007 புலமைச்சுடர் (தொகுதி 4)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
2007 புலமைச் சுடர் (தொகுதி 04) புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 87., அளவு 20.5X13.5 சமீ., ISBN-13 : 978-955-8913-85-7
இந்நூலின் நூலாசிரியர் புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்திவரும் வழிகாட்டிக் கருத்தரங்குகளின் போது இந்நூல் விநியோகிக்கப்பட்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி 01, பகுதி 02 வினாப்பத்திரங்களில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தரவுகள் சுருக்கக் குறிப்புகளாக இணைக்கப் பட்டுள்ளன. இது சிந்தனைவட்டத்தின் 255வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4308).
எனது 117வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 54 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 1)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 54 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 1)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 01) பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
40 பக்கம், விலை: ரூபா 80., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-87-1
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூல பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் முதலாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 256வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4312).
எனது 118வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 55 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 2)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 55 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 2)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 02) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 70., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-88-8
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் இரண்டாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 257வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4313).
எனது 119வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 56 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 3)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 56 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 3)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 03), பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 80., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-89-5
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் மூன்றாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 258வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4314).
எனது 120வது நூல் (ஆகஸ்ட் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 57 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 4)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 57 வது நூல்
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 4)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 04) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X18 சமீ., ISBN-13: 978-955-8913-90-1
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் நான்காவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01 இல் ஏழு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஏழு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 259வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4315).
என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (111 முதல் 115 வரை)
என்னால் எழுதி வெளிவந்த 111வது நூல் (பெப்ரவரி 2007)
தமிழ் - முஸ்லிம் இன உறவு
தமிழ் - முஸ்லிம் இன உறவு
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
தமிழ்-முஸ்லிம் இன உறவுகள். பீ.எம்.புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்).
லண்டன்: தேசம் வெளியீட்டகம், த.பெ.35806, லெய்ட்டன்ஸ்டோன், இணை வெளியீடு,
உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மார்ச்
2007. (உடத்தலவின்ன 20802: அச்சீட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், 14,
உடத்தலவின்ன மடிகே)
96 பக்கம், விலை: ரூபா 120., ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 20.5X14.5 சமீ., ISBN: 978-955-8913-71-0.
லண்டனிலிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. தேசத்தின் பத்தாண்டுக்கால வெளியீடுகளில் முஸ்லிம் மக்கள் பற்றியும், தமிழ்- முஸ்லிம் இன உறவுகள் பற்றியும் வெளிவந்த 17 கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 10.03.2007ல் லண்டன் வோல்த் தம்ஸ்ரோ வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம் பெற்ற தமிழ்-முஸ்லிம் இன உறவு பற்றிய கலந்துரையாடலின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. சிந்தனை வட்டத்தின் 247ஆவது வெளியீடாக இது வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4968)
96 பக்கம், விலை: ரூபா 120., ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 20.5X14.5 சமீ., ISBN: 978-955-8913-71-0.
லண்டனிலிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. தேசத்தின் பத்தாண்டுக்கால வெளியீடுகளில் முஸ்லிம் மக்கள் பற்றியும், தமிழ்- முஸ்லிம் இன உறவுகள் பற்றியும் வெளிவந்த 17 கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 10.03.2007ல் லண்டன் வோல்த் தம்ஸ்ரோ வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம் பெற்ற தமிழ்-முஸ்லிம் இன உறவு பற்றிய கலந்துரையாடலின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. சிந்தனை வட்டத்தின் 247ஆவது வெளியீடாக இது வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4968)
என்னால் எழுதி வெளிவந்த 112வது நூல் (மார்ச் 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 49 வது நூல்
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 49 வது நூல்
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், இல.14, உடத்தலவின்ன மடிகே 1வது பதிப்பு, மார்ச் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
64 பக்கம், விலை: ரூபா 97, அளவு: 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-44-8.
தரம் 5 புலமைப்பரிசில் அரசாங்கப் பரீட்சையை முன்னிட்டு 2007இல் வெளியாகியுள்ள நூல் தொடரில் 3வது பாகம். இந்நூலில் ஆரம்ப விஞ்ஞானம், ஆரம்ப கணிதம், போன்ற பாடப்பரப்பு வினாக்களும் அரசாங்க வினாப்பத்திரம் பற்றிய அணுகுமுறை விளக் கங்களும் வழங்கப்பட்டள்ளன. தேவையான இடங்களில் பொருத்தமான விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மாணவர்கள் சுயமாக விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் எளிய நடையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 248ஆவது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4271).
என்னால் எழுதி வெளிவந்த 113வது நூல் (மே 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 50 வது நூல்
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 50 வது நூல்
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04)
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04) பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே). 48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X 13.5 சமீ., ISBN : 955-8913-45-6
இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலில் சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தில் இடம்பெறக் கூடிய அறிமுக விஞ்ஞானம், சுற்றாடல் போன்ற பாட அலகுகளின் சுருக்கக் குறிப்புகள் புலமைப்பரிசில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படையில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4272).
என்னால் எழுதி வெளிவந்த 114வது நூல் (மே 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 51 வது நூல்
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 51 வது நூல்
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X 13.5 சமீ., ISBN: 955-8913-46-4
இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட வழிகாட்டி நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலில் சுற்றாடல்சார் செயற் பாடுகள் பாடத்தில் இடம்பெறக் கூடிய அழகியல், சிங்களம், ஆங்கிலம் போன்ற பாட அலகுகளின் சுருக்கக் குறிப்புகள் புலமைப்பரிசில் மாணவர் களுக்குத் தேவையான அடிப்படையில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4273).
என்னால் எழுதி வெளிவந்த 115வது நூல் (மே 2007)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 52 வது நூல்
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 06)
என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 52 வது நூல்
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 06)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…
2007 புலமைப்பரிசில் மாணவர் வழி காட்டி (தொகுதி 06) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X13.5 சமீ., ISBN-10: 955-8913-47-2
இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு சிந்தனை வட்டம் ஆண்டு தோறும் அகில இலங்கை ரீதியில் தபால் மூலம் வழிகாட்டிப் பாடநெறியினை நடத்தி வருவதுண்டு. இப்பாட நெறியில் ஆறு புலமைப் பரிசில் வழிகாட்டி நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 2007ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டி நூல்; தொடரில் இது ஆறாவதாகும். இந்நூலில் புலமைப்பரிசில் மாணவர் களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புகள்; சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4274).
Subscribe to:
Posts (Atom)